சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.

Green organics chennai stores and Agro Food products exporters

கிரீன் ஆர்கனிக்ஸ் – பசுமையகம்

Green organics chennai stores and Agro Food products exporters

சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு. ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.

Green organics chennai stores and Agro Food products exporters

வரும் 21ம் தேதி நவம்பர் மாதத்தில் காலை சுமார் 10.30 மணிக்கு இந்த இயற்கை அங்காடியை திறந்துவைக்க மக்கள் டிவி புகழ் ஹரிதாசன் அவர்கள் வருகிறார். இந்த அங்காடி, அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெண் சமூக சேவகர்கள் திருமதி.செல்வராணி மற்றும் திருமதி.தனலட்சுமி அவர்களால் துவங்கி நடத்தபடவுள்ளது.

ரசாயன கலப்பில்லாத உணவு :

ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களும், பாரம்பரிய சிறு தானியங்களும், பயிர் வகைகளும், அது சம்பந்த பட்ட உணவு பொருள் தயாரிப்புக்கள் ( ஜாம், ஜூஸ், மற்றும் ஊறுகாய் வகைகள்) விற்பனை துவங்குகிறது.

பல இனம் புரியாத நோய்களும் அது தீர்க்கும் நோய்களும் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டு தான் இருக்கிறது. இதை தடுக்க ஒரே வழி ரசாயன கலப்பு இல்லாத இயற்கை உணவு வகைகளை உட்கொள்வது மட்டுமே…

வளரும் நாடுகளில் (இந்திய உள்பட) சுமார் 10 முதல் 15 சதவிகித தனி நபர் வருமானம் நோய் தீர்க்கும் மருந்துகளுக்கும், உட்டசத்து டானிக்களுக்கும் செலவிட படுகிறது என உலக சுகாதார நிறுவன தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக குண்டான தன்மையை குறைக்க பலர் தங்களது வருமானத்தில் ஒரு கணிசமான அளவு தொகையை செலவு செய்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம், நம்முடைய உணவு பழக்கமே..  இதில் ஓர் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இன்று இந்திய சந்தையில் அல்லது கடைகளில் கிடைக்கும் பொருட்களில் பெரும்பாலானவை மேலை நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அல்லது கால்நடைகளுக்குக்காக  தயாரிக்கப்பட்ட உணவுபொருட்களே ஆகும்.

 இது போன்ற உணவு வகைகளை தினசரி உட்கொள்ளும் இந்திய மக்களிடையே புதுமையான நோய்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. புற்று நோயின் தீவிரம் ஒவ்வொரு நாளும் வீரியதன்மையோடு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவைகளை தவிர்க்க ஒரே வழி உணவு பழக்க வழக்க மாற்றமும் உடற்பயிற்சி மட்டுமே… குறிப்பாக சொல்லபோனால் உணவு பழக்கம் மாற்றம் தேவையில்லை. நம் முன்னோர்கள் உறுதியாக நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததும், சித்தர்கள் நோயின்றி வாழ்ந்ததையும் நாம் புத்தகத்தில் மட்டுமே படித்துள்ளோம்.

இதன் தொடக்கமாக இந்திய பாரம்பரிய உணவான சிறு தானியத்தை எடுத்துகொண்டால், சிறு தானியத்தை விட சத்து மிகுந்த கொழுப்பு அறவே இல்லாத உணவு வேறு எதுவும் உலகத்தில் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் உணவைவிட சிறு தானியத்தில் சத்து மிகுதியாக உள்ளது. நம் நாட்டில் கிடைக்கும் சுவையான சிறு தானிய உணவு வகைகளை மறந்து எதற்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் விலை உயர்வான ஓட்ஸ் உணவு சாப்பிடவேண்டும்.

உணவே மருந்து மருந்தே உணவு :

உணவே மருந்து மருந்தே உணவு என நம் மூதாதையர்கள் சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள். அன்று நம் முன்னோர்கள் உட்கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுவை தான் நாம் இன்றை புத்தகத்தில் “ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு” என்ற தலைப்பில் படித்துக்கொண்டு இருக்கிறோம். மேலும் இன்றைய தலைமுறையினர்கள் மருந்தே உணவு எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் நம்மில் ஏற்பட்ட உணவுப்பழக்க வழக்க மாற்றம் தான். இந்த நவீன உலகத்தில் உடனடி உணவு என்று அழைக்கப்படும் “பாஸ்ட் ஃபுட்” கலாச்சாரம் பெருகிவிட்டது. இந்த மாற்றமே நம்மில் உருவாகும் புதிய நோய்களுக்கு முக்கிய காரணம். இந்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க மீண்டும் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி உண்ட உணவு முறைக்கு மீண்டும் தொடர வேண்டும் என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சிறு தானிய உணவு பொருட்கள் மனிதர்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்த்தை கொடுக்கின்றன. வரகு, குதிரைவாலி, திணை, கம்பு, சிகப்பரிசி, சோளம், கைகுத்தல் அரிசி, சாமை போன்ற உணவு தானியங்களை சமையல் செய்து சாப்பிடுவதன் மூலம் மனிதர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொழுப்பு முற்றிலும் குறையும், உடல் பருமன் உண்டவதர்க்கான கொழுப்பு சத்து ஏதும் இதில் இல்லாது புரத சத்து மற்றும் ஊட்ட சத்து மிகுந்து இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிறுதானியங்கள் :

சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை வைத்து இன்றும் கிராம புறங்களில் சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆகவே தான் அவர்களுக்கு மருத்துவமனையும், மருந்துகளும், மருத்துவர்களும் தேவைபடுவதில்லை. மேலும் இவர்களுக்கு நீரிழிவு, இதயநோய், உடல்பருமன், போன்றவைகள் ஏற்படுவது இல்லை.

கம்பு, சோளம் :

கம்பில் சுண்ணாம்பு, புரதம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளது. கம்புக்கு ஜீரண சக்தியை அதிகரித்து கொடுக்கும் தன்மை உண்டு. உடலில் உள்ள வெப்பநிலையை சமமான நிலையில் வைத்திருக்கும். உடலுக்கு தேவையற்ற கொழுப்பை கரைத்து பருமனைக்குறைவாக்கும். இது குழந்தை பெற்ற அன்னையர்களுக்கு தாய்பால் உற்பத்தியை கூடுதலாக்கும். உடலின் வலிமையை கூடுதலாக்கும்.

சோளத்தில் உடலிற்கு அத்தியாவசியமான புரத சத்து, இரும்பு சத்து, மற்றும் கால்சியம் சத்துக்கள் கூடுதலாக இருக்கிறது. சோள தானிய உணவு வகைகள் உடலிற்கு உறுதி யளிக்க வல்லது. மேலும் சோளம் உடல் பருமனை வேகமாக குறைக்கும். அதுமட்டுமல்லாது சோளம் மருத்துவ குணம் கொண்டது. அது வயிற்றுப்புண் ஆற்றும், வாய் வீச்சத்தைப்போக்கும். மூலநோயாளிகளுக்கு மட்டும் சோள உணவு உகந்தது அல்ல..

வரகு – ராகி :

தமிழக பாரம்பரிய தானியமான வரகில் புரத சத்து, இரும்புசத்து மற்றும் சுண்ணாம்புச்சத்து கூடுதலாக உள்ளது. இது கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைவாக்கக்கூடியது. மாதவிடாய் கோளாரினால் அவதியுறும் பெண்கள் வரகை சமையல் செய்து உண்பது நல்லது.

தானியங்களிலேயே அதிக சத்துநிறைந்தது கேழ்வரகு. ராகி என பிரபலமாக அழைக்கபடும் இந்த தானியத்தில் புரத சத்து, தாது உப்பு, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, மற்றும் இரும்புச்சத்துக்களும் நிறைந்து இருகின்றது. இது உடல் வெப்பத்தை தனித்து சமமான நிலையில் நிறுத்தி வைத்திருக்கும் தன்மை கொண்டது. குடல் வலிமையை அளிக்க வல்லது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட கேழ்வரகு தானியத்தில் சமையல் செய்யப்பட்ட உணவு பண்டங்களை உண்ணலாம். கேழ்வரகு தானியத்தை வைத்து தான் “ராகி மால்ட்” தயாரிக்கபடுகிறது.

மலட்டு தன்மையை போக்கி ஆண்மையை அதிகபடுத்தும் தானியம் சாமை :

சாமை தானிய உணவு எல்லா வயதினருக்கும் உகந்தது. இந்த தானியம் மலச்சிக்கல் நோயை போக்கும். வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும். ஆண்களுடைய விந்து உற்பத்தியை அதிகரித்து ஆண்மை தன்மை குறைபாடுகளை நீக்க உகந்தது. நீரிழிவு நோயினால் பாதிப்படைந்த நோயாளிகளும் கூட சாமை தானியத்தில் தயாரிகப்பட்ட உணவை உட்கொள்ளலாம்.

Green organics chennai stores and Agro Food products exporters

Health benifits of Millet grains

For Organic food Requirements and Export, Please contact :

Green Organics
 
Chennai – 600037
Tamilnadu – India
 
email : organicfoodexports@gmail.com
 

உடலுக்கு நலனுக்கு நமது பாரம்பரிய உணவான சிறு தானியங்கள் தான் சால சிறந்தது.

Eating Millet grains gives various health benefits. People who eat Millet grains as part of a healthy diet will ovoid the risk of some chronic diseases. Millet Grains provides many nutrients that are vital for the health and maintenance of our bodies.

Related posts