ஆப்கானிஸ்தானில் பதுக்கியிருந்த குண்டு வெடித்து 18 பொதுமக்கள் பலி

Bomb kept in roadside blasted in Afghanistan when a passenger Van crossed it carrying a team of marriage party, 18 people died including 14 women, 1 child and 3 men.

காஸ்னி :- ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் இருக்கும்  அந்தர் மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்கு வேன் ஒன்றில் 23 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பஷ்தூன் பழங்குடியினர் வாழும் பகுதியினுடைய சாலை ஓரத்தில் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு மேல் அந்த வேன் ஏறியது. இதனால் அந்த வேன் பயங்கரமாக வெடித்து சிதறியது.

Bomb kept in roadside blasted in Afghanistan when a passenger Van

இந்த வெடிகுண்டு வெடித்ததில் 14 பெண்கள், 1 குழந்தை மற்றும்  3 ஆண்கள் என்று 18 அப்பாவிகள் பலியானார்கள். இதில் 2 பேருடைய நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதில் 5 பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெடிகுண்டு தாக்குதலை தங்கள் செய்யவில்லை என தலிபான்கள் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பாதுகாப்பு படையை சார்ந்தவர்கள்  மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்தே நடத்தப்படும் தாக்குதல்களில் பல பொதுமக்கள் பலியாகிறார்கள் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு பாதுகாப்பாக அமெரிக்க தலைமையிலான 97 ஆயிரம் வீரர்களை கொண்ட நேட்டோ படையினர் அங்கே தங்கி இருந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த வீரர்கள் அடுத்த ஆண்டு வெளியேறயிருக்கிறார்கள். இந்த நிலையில் தலிபான்கள் அவர்களை நோக்கி இதுபோன்ற  தாக்குதல்களை  நடத்தி வருகிறார்கள்.

Bomb kept in roadside blasted in Afghanistan

Bomb kept in roadside blasted in Afghanistan when a passenger Van crossed it carrying a team of marriage party, 18 people died including 14 women, 1 child and 3 men.

Related posts