இந்தியாவில் விவசாய பணிகளில் 80% பெண் விவசாயிகள்

Women do 80% of farm work, own only 13% land: Oxfam

Women do 80% of farm work, own only 13% land: Oxfam

இந்திய விவசாய பணிகளில் 80% பெண்கள் ஈடுபடுகிறார்கள். மேலும் இந்தியாவில் சுமார் 17 கோடி பெண்கள் விவசாயம் மற்றும் விவசாய சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 60 முதல் 80 % வரை தானிய உற்பத்தி மற்றும் அதுசார்ந்த பணிகளில் அவர்களுடைய பங்களிப்பு இருக்கிறது. அதே போல், பால் மற்றும் பால் சம்பந்த பட்ட   பொருள்களின் உற்பத்தியில் 90% பங்களிப்பும் இருக்கிறது. எனினும்,  13% பெண்களே நிலத்தின் உரிமையாளர்களாகவும் இருகிறார்கள் என ஆக்ஸ்பேர்ம் இந்தியா தெரிவித்திருக்கிறது.

நேற்று உலக உணவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு சாராத தொண்டு நிறுவனம் ‘ஆக்ஸ்பேர்ம் இந்தியா’ வெளியிட்டுள்ள  செய்தி ஒன்றில் மேற்கூறிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள், பயிர் சாகுபடி பருவ காலத்தில் சுமார் 3,300 மணி நேரம் வேலையில் ஈடு படுகிறார்கள். அதே வேளையில் ஆண்கள் 1,860 மணி நேரம் மட்டும் தான் வேலை செய்கிறார்கள். எனினும் வெளி உலகுக்கு ஆண்கள் தான் விவசாயிகள், தொழிலாளிகள், உழைப்பாளிகள் எனவும் போற்றி பாராட்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், விவசாய பணியினுடைய அடிப்படையினில் அந்த அந்தஸ்து அவருக்கு கிட்டவில்லை. நிலத்தின் உரிமை யாளர் என்ற முறையிலேயே தான் கிடைக்கிறது.

பெரும்பான்மையாக கிராம புறங்களில் இருக்கும் பெண்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. ஆதலால், அவர்களுக்கு விவசாயக் கடன் ஏதும் வங்கிகள் கொடுப்பது இல்லை. இது தவிர சமூக சலுகைகளும் வேறு  எதுவும் கிடைப்பதுமில்லை. விவசாயத்தில் பெண் விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டு அந்தந காரணமாக வறுமையினால் தற்கொலை செய்து கொண் டால், எந்த இழப்பீடும் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. இதற்கு காரணம் எந்த விவசாய நிலமும் அவரது பெயரில் இல்லாதது தான் என தெரிய வந்துள்ளது.

Women do 80% of farm work, own only 13% land: Oxfam

They till the land, sow, harvest and milk the cows to bring food on our tables but a majority of close to 80 per cent women engaged in farm-related activities in India have no land rights.About 17 crore women work in agriculture and allied activities, producing about 60-80 per cent of our food and 90 per cent of dairy products but only 13 per cent have property rights, says a factsheet brought out by Oxfam India, on the occasion of World Food Day on Wednesday.

Related posts