கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு தடை

The Sri Lankan government rejected a plan to allow Indian fishermen

கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

சர்வதேச கடல் எல்லை கோட்பாட்டை தமிழக அரசோ தமிழக மீனவர்களோ மீற முடியாது என அவர் கூறினார். கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதித்தால் அது இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,ஆண்டுக்கு 70 நாட்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் பகுதியில் தமிழ‌க மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ள இலங்கை மீனவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்துள்ளது. கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். சர்வதேச கடல் எல்லை கோட்பாட்டை தமிழக அரசோ தமிழக மீனவர்களோ மீற முடியாது என அவர் கூறினார். கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதித்தால் அது இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,ஆண்டுக்கு 70 நாட்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் பகுதியில் தமிழ‌க மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ள இலங்கை மீனவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்துள்ளது.

The Sri Lankan government rejected a plan to allow Indian fishermen

Related posts