இன்று வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலவு

பௌர்ணமி தினமான இன்று(ஞாயிறு,23/06/2013) வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலா தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியை நிலா நீள்வட்ட கோளத்தில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும். அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான அளவை விட 30 சதவிகிதம் கூடுதலாக தெரியும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் ஓராண்டுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு தோன்றும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் ஒரு சில பகுதிகளில் இந்த மிகப் பெரிய நிலா காலை 7 மணிக்கே தெரிந்ததையும் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

today we can see big moon

Related posts