தமிழக அரசு, LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை மூன்று மாதங்களில் இறுதி செய்து வெளியிடுவதாக தெரிவித்துள்ளது : சென்னை உயர்நீதிமன்றம்.

LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை இறுதி செய்யும் பணியில் உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. LGBTQIA+ சமூகத்தின் நலனுக்கான கொள்கைகளை தெரிவிக்க இதுவரை எந்த மாநிலமும் முன்வராத நிலையில், இந்தக் கொள்கைகளை நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் திருநங்கைகளின் நலனுக்கான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஒரு மாநிலம் LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையைக் கொண்டுவருவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பான நிலை அறிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வு, சமூகத்துடன் தொடர்புடைய களங்கத்தை அகற்றி, சமூக உறுப்பினர்களின் நலனை உறுதி செய்யும் முயற்சியில், தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாடு வரைவு விதிகளாக , திருநங்கைகளின் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகளை, 2022 – ல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, சட்டத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ் சிலம்பனன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விதிகள் பின்னர் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றார்.
LGBTQIA+ சமூகத்திற்கான வரைவுக் கொள்கையை மாநிலத் திட்டக் கமிஷன் முதலமைச்சரிடம் சமர்ப்பித்து இருப்பதாகவும், அது மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தொடர்ந்து கண்காணித்த சமூக நல இயக்குனர் பங்குதாரர்களுடன் கூட்டங்களை கூட்டி வந்ததாகவும் இந்த மாநிலம் பயிற்சியை 3 மாதத்தில் முடித்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருநங்கைகள் மற்றும் LGBTQIA+ சமூகம் பெருமளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தமிழக அரசு நேர்மையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்த நீதிமன்றம், அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிப்பதாக நீதிபதி கூறினார். 2019 ஆம் ஆண்டு மத்திய சட்டம் பிரிவு 22(1) இன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு கொண்டு வருவது மாநில அரசால் எடுக்கப்பட்ட, மேலும் ஒரு நல்ல பயனுள்ள நடவடிக்கையாகும் என்றார்.
இதனால் LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை இறுதி செய்ய அரசுக்கு 3 மாத கால அவகாசம் வழங்குவதாக நீதிமன்றம் கூறியது.
பள்ளிகளில் விழிப்புணர்வு,
பள்ளிக் கல்வி ஆணையர், திருநங்கைகள் மற்றும் ஒட்டுமொத்த LGBTQIA+ சமூகம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இது பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த நபர்களின் தனித்தன்மைகள் மற்றும் அவர்களின் பாலினத்தை குறிப்பிட ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது என்று AAG தனது அறிக்கையில் சமர்ப்பித்தது.
பள்ளிக் கல்வி ஆணையரால் எடுக்கப்பட்ட இந்த பயனுள்ள நடவடிக்கைகளை, நீதிமன்றம் வெகுவாக பாராட்டுவதாகத் தெரிவித்தார். மேலும் பள்ளிக் கல்வி ஆணையர் இந்த பயிற்சியை ஒரு முறை நடத்துவதோடு விட்டு விடாமல், தொடர்ந்து நடத்த வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக நீதிபதி கூறினார்.



Related posts