ஆன்லைன் மோசடி மூலம் இழந்த தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகளால் மீட்டெடுக்க முடியாது – கேரள உயர்நீதிமன்றம்

எர்ணாகுளம்:மூன்றாம் நபர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் மோசடி பரிவர்த்தனைகள் செய்ததாக குற்றம் சாட்டிய இருவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி ஏ. முஹம்மது முஸ்டாக் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கடன் கணக்கில் இருந்து திரும்ப பெறுவதற்கு மனுதாரர்கள் தான் பொறுப்பு என்பதை சிவில் நீதிமன்றம் மூலம் நிரூபிக்காமல் அவர்கள் பொறுப்பேற்க முடியாது.மேலும் மனுதாரர்களால் செலுத்தப்பட்ட தொகை அதே முறையில் மோசடி பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் தீர்ப்பின் நகலைப் பெற்ற நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.மோசடி பரிவர்த்தனைக்கு யார் காரணமோ அவர்கள் தான் பொறுப்பேற்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Related posts