வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை : ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது . அந்த மனு நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் டூட்டி பிரீ ஷாப் கடை வைத்துள்ளனர்.விற்பனை வரி துணை ஆணையர் விற்பனையை தொடர்ந்து உள்ளீட்டு வரிக்கடன் பணத்தை திரும்ப தர மறுத்துவிட்டார்.ஆனால் எங்களுக்கு இந்தியாவில் உள்ள எங்களுடைய மற்ற சர்வதேச விமான நிலைய டூட்டி பிரீ ஷாப் கடைக்கு உள்ளீட்டு வரிக் கடன் பணம் திரும்ப கிடைப்பதாக தெரிவித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை என்று தெரிவித்தனர்.

Related posts