தண்ணீர் லாரிகளை கட்டாயமாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:இளையராஜா என்பவர் வழக்கு நங்கநல்லூரில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக லாரிகள் மூலம் விற்பனை செய்து வருவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.இந்த வழக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. நீரை எடுத்து வழங்குவதற்கு லாரிகளின் உரிமம் விவரங்களை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது. விவரங்களை வழங்க மறுத்தால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தண்ணீர் லாரிகளை கட்டாயமாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts