சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி! டெல்லி: சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது . சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார் .இவரது மனைவி பெயர் ஜீவஜோதி. கொடைக்கானல் மலையில் சரவணபவன் ஹோட்டலின் ஊழியர் சாந்தகுமார் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வந்தது. ராஜகோபால் தான் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றதாக கூறப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஹை ஐகோர்ட் ஆயுள் தண்டனை தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து,சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.இந்த வழக்கில் வலுவான சாட்சியங்கள் இருப்பதால் ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

டெல்லி: சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது . சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார் .இவரது மனைவி பெயர் ஜீவஜோதி. கொடைக்கானல் மலையில் சரவணபவன் ஹோட்டலின் ஊழியர் சாந்தகுமார் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வந்தது.ராஜகோபால் தான் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றதாக கூறப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஹை ஐகோர்ட் ஆயுள் தண்டனை தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து,சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.இந்த வழக்கில் வலுவான சாட்சியங்கள் இருப்பதால் ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Related posts