புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் சரிதான் : உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் சென்னை:திருப்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸ் முகமது சலீம், முகமது ராபின் உசையன் உள்பட 6 பேர் முறையான அனுமதியும் இல்லாமல் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது.பிறகு அந்த 6 பேரையும் வேலப்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்து உறுதி செய்தனர் . அவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த 6 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியுள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் பற்றியும் குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்.இவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு சரிதான் என உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் . புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்த இவரது தந்தை வருமானத்துக்கு கூடுதலாக சொத்து குவித்தது சம்பந்தமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அசோக் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த புதுச்சேரி சி.பி.ஐ நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மேலும் வருமானத்துக்கு கூடுதலாக சேர்த்துவைக்கப்பட்ட ரூபாய் 1.74 கோடியை பறிமுதல் செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தை தகுதிநீக்கம் செய்து, புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலாளர் உத்தரவிட்டார்.

இவ்உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோக் ஆனந்த் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கு நீதிஅரசர்கள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிஅரசர்கள், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தை தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என்றும், அந்த உத்தரவை உறுதி செய்வதாகவும் கூறினார்கள். மேலும் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்கள்.

News in English

Puducherry MLA Disqualification: High Court uphelds the Order

CHENNAI: A division bench of the Madras High Court has upheld an order dated November 8, 2018, of the Puduchery Assembly Speaker and Home Secretary disqualifying Ashok Anand from being an MLA. The bench upheld the disqualification order and dismissed the writ petition from Ashok Anand, on Monday.

The petitioner’s father Anandane, while working as a government servant (PWD engineer), is alleged to have accumulated assets, which were disproportionate to his known sources of income in his name and in the names of his wife Vijayalakshmi and son Ashok Anand. A case was registered under Sec. 109 of the IPC read with Sec 13(2) and 13(1)(e) of the Prevention of Corruption Act by CBI.

A Special Judge for Prevention of Corruption Act, Puducherry, convicted Anandane and his son Ashok Anand and sentenced them to undergo one year rigorous imprisonment and to pay a fine of `1 lakh each.

The petitioner applied for an appeal and the same was pending before the High Court. He contended that the offence under Sec.109 of the IPC is a separate one, even though punishable in the context of the other offence. His conviction is not under any of the provisions of the Prevention of Corruption Act and therefore, he cannot be disqualified, as contemplated under Article 102 of the Constitution, he added.

Citing various provisions in the Constitution, Representation of the People Act and connected Acts, the bench dismissed the petition. It was also brought to the notice of the bench that during the pendency of the present writ petition, the petitioner has made a representation to the Lieutenant Governor regarding his disqualification and prayed to defer the holding of bye-election to Thattanchavady Assembly constituency, from where he was elected. The representation was forwarded to the President of India.

The petitioner has also filed another writ petition to prohibit the Election Commission from notifying the bye-election to the said constituency and the same was dismissed on Last March 18.

Related posts