பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்

பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார்.

சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.

Related posts