தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Maintain law and order, Madras high court directed State government

சென்னை : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிலைகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைய் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலை உடைத்து நொறுக்கப்படும் என சமூக வலைத்தளம் முகநூலில் பதிவிட்டிருந்த கருத்தினால் தமிழ்நாடு முழுக்க அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் வேலூரில் தந்தை பெரியார் சிலை சமூகவிரோதிகள் சேதப்படுத்தியதை கண்டித்து வழக்குரைஞர் சூர்யபிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தமிழ்நாட்டில்மி சட்டம் ஒழுங்கு பாதுகாத்திட வேண்டும். சிலைகள் பாதுகாப்பு உறுதி செய்ய பட வேண்டும்பா என வழக்குரைஞர் சூர்ய பிரகாஷ் அந்த பொதுநல மனுவில் கோரி இருந்தார்.

தமிழ்நாட்டில் நிலவும் இந்த அசாதாரண பதட்ட மான சூழலால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளயிருக்கிறார்கள். இந்த சூழல் வர காரணமான கருத்தை வெளியிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் தற்சமயம் நிலவும் அசாதாரண சூழலுக்கு என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என அரசு தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தந்தை பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சட்டத்தை மதிக்காது வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் மற்ற அனைத்து சிலைகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

English News :

Maintain law and order, Madras high court directed State government

CHENNAI: The Madras high court 1st bench under Chief justice on Wednesday directed the TN state government to guarantee support of laws & order and secure the peace over the state in perspective of the Periyar statue contention caused by BJP leader H Raja’s message via web-based networking media.

The 1st bench of Chief Justice Indira Banerjee and Justice Abdul Quddhose passed the headings while shutting a PIL moved by advocate A P Suryaprakasam looking for a course to the police to make fundamental move to keep up peace in Tamil Nadu in perspective of the contention.

At the point when the request came up for hearing, additional advocate general Aravindth Pandian presented that the govt had just seized of the issue and guaranteed sufficient security to Periyar statues over the state. In this suituation, four individuals engaged with savagery had been arrested, he included.

As per the petitioner, Raja’s unreliable remark impelled savagery in the state bringing about assault on a Periyar statue by BJP cadets in Tirupathur and sacrosanct strings (poonool) of 15 individuals were cut by lowlifes in Chennai.

Related posts