இந்திய பசிபிக் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது : பிரதமர் நரேந்திர மோடி.

India supports regional security architecture : PM Narendra Modi

பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவது அத்தியாவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு பாரதத்தின் அடுத்த குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது பற்றி பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்க்கிழமை (14th செப்) நடைபெற்ற ஆசியான் -இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்காசியக் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் மோடி உரையாற்றியது :

பயங்கரவாதமும், தீவிரவாதமும் :

பயங்கரவாதமும், தீவிரவாதமும், இந்ததப் பிராந்தியம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால்களாகும். அவற்றில் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் அடங்கும். பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்த்துப் போரிட அனைத்து நாடுகளும் கைகோர்த்துச் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதச் சிந்தனை பரவுவதையும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகும். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்து, தங்கு தடையற்ற விமானப் போக்குவரத்து ஆகியவற்றை இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். வடகொரியாவின் அணு ஆயுதப் பரவல் தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் நலன் :

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் நலன்களைப் பேணுவதற்கும், அது அமைதியான முறையில் வளர்ச்சியடைவதற்கும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆசியான் அமைப்புக்கு இந்தியா நிலையான ஆதரவை வழங்கும்.

இந்தப் பிராந்தியத்தில் கிழக்காசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த அமைப்பு இனி வரும் ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறுவதையும் நாங்கள் விரும்புகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டிருப்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

உலக அளவில் பெரிய அளவில் பிளவுகள் ஏற்பட்டிருந்தபோது ஆசியான் அமைப்பு உருவானது. தற்போது அது நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது. அந்த அமைப்பு அமைதி மற்றும் செழுமைக்கான அடையாளமாகத் திகழ்கிறது.

இந்தியக் குடியரசு தின விழா :

தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்தியக் குடியரசு தின விழாவுக்கும், அதற்கு முந்தைய தினம் நடைபெற உள்ள இந்திய-ஆசியான் நினைவு உச்சிமாநாட்டுக்கும் வருகை தருமாறு ஆசியான் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார் மோடி.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்க மனப்பான்மை அதிகரித்து வருவது தொடர்பாக ஆசியான் நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து பிராந்தியப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா தயாராக உள்ளது என்பதையே பிரதமர் சூசகமாகத் தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆசியான் அமைப்பில் 10 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தவிர, இந்தியா, ஜப்பான், சீனா, கொரியக் குடியரசு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளும் சேர்ந்து கிழக்காசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் கிழக்காசியக் கூட்டமைப்பு என்பது முதன்மையான அமைப்பாகத் திகழ்கிறது. கடந்த 2005-இல் உருவாக்கப்பட்டது முதல், கிழக்காசியாவில் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது.

India supports regional security architecture : PM Narendra Modi

News in English : Courtesy PTI.

Manila, Nov 14 : Prime Minister Narendra Modi today strongly pitched for setting up of a rules-based regional security architecture in the Indo-Pacific region, in a clear display of convergence of strategic interests among major powers and India, and sending a subtle message to China against its military assertiveness in the area.

In his address at the ASEAN-India and East Asia summits, Prime Minister Modi also identified terrorism and extremism, including cross-border terrorism, as the major challenge facing the region and said time has come for all the countries to join hands to collectively deal with it.

Need for united approach to contain terrorism and radicalisation

Modi talked about need for united approach to contain terrorism and radicalisation in the region, asserted India’s long-held position on freedom of navigation and over flight in the Indo-Pacific, called for an irreversible denuclearisation of the Korean peninsula and sought a detailed probe into North Korea’s nuclear proliferation linkages.

“India assures the ASEAN of its steady support towards achieving a rules-based regional security architecture that best attests to the region s interests and its peaceful development,” Modi told leaders of 10 South East Asian countries.

His comment is seen as India’s readiness in playing a major role in the broader regional security framework along with the US, Japan, Australia, which are giving shape to a quadrilateral security coalition, amid growing concerns among the ASEAN and other players over China s military maneuvering in the Indo-Pacific.

Cross-border terrorism in Indo-Pacific region :

On the threats faced by the region by terrorism, including cross-border terrorism, Modi said time has come for all the countries to join hands to collectively deal with it.

“We have individually strived very hard to fight terrorism and violent extremism. It is time that we jointly address this challenge by intensifying cooperation in this crucial area,” he said.

Reflecting its seriousness on terror, the East Asia Summit, a grouping of 10 ASEAN nations and nine other major countries including the US, India, Russia, China and Japan, issued separate declarations on anti-money laundering and countering terror financing as well as on combating ideological challenges of terrorist narratives.

The countries of grouping, in the declarations, expressed strong resolve to work unitedly to deal with the challenge of terror networks.

Secretary East in the External Affairs Ministry, Preeti Saran

Secretary East in the External Affairs Ministry, Preeti Saran, said at the EAS, Modi stressed on safe and secure navigation in the Indo-Pacific region and called for adherence to rule of law and international obligation including respect for UNCLOS (United Nations Convention on the Law of the Sea), in clear reference to China s aggression in South China Sea.

The issue relating to security in Indo-Pacific was discussed during the meeting between Modi and US President Donald Trump yesterday. It was learnt that the issue figured in bilateral meetings Modi had with his Australian and Japanese counterpart today.

“He (the PM) also called for the complete verification and irreversible denuclearisation of the Korean peninsula. He also pointed out that North Korea s proliferation links must be investigated and to hold into account the parties who have supported these unlawful programmes,” said Saran.

There have been reports that Pakistan had supported North Korea’s nuclear programme.

Saran said Modi also mentioned about India s position on Rohingya issue at the EAS. The violence against the Rohingyas in Myanmar’s Rakhine State have forced more than 600,000 people to flee the country to Bangladesh.

The prime minister also participated at a meeting of leaders of Regional Comprehensive Economic Partnership (RCEP) and expressed India’s commitment to its trade negotiations.

The RCEP, comprising 10-member ASEAN bloc and six other countries

: — India, China, Japan, South Korea, Australia and New Zealand, is engaged in negotiations for a free trade pact.

In his address at the ASEAN, Prime Minister Modi talked about shared values and common destiny between India and the grouping and invited the leaders of the 10 countries to India s Republic Day celebration as well as to a India-ASEAN Commemorative Summit in New Delhi on January 25 next year.

Modi said 1.25 billion people of India are keen to welcome the ASEAN leaders as “our Chief Guests at India s 69th Republic Day Celebrations.”

The ties between India and ASEAN have been on an upswing.

The ASEAN region along with India together comprises combined population of 1.85 billion people, which is one fourth of the global population and their combined GDP has been estimated at over USD 3.8 trillion.

Investment from ASEAN to India has been over USD 70 billion in the last 17 years accounting for more than 17 per cent of India s total FDI.

Lawyers in Chennai

 

Related posts