மாநாட்டை இந்தியா புறக்கணித்தால்!!! இலங்கை தூதர் எச்சரிக்கை

prime minister Manmohan singh may not participate in common wealth summit

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால்!!! இந்தியாவுக்கு இலங்கை தூதர் எச்சரிக்கை

இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

prime minister Manmohan singh may not participate in common wealth summit

இலங்கையில் நடக்கபோகும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகையில் தமிழக மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து  பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஒரு முடிவை எடுப்பார் என்று கூறினார்.

இதனிடையில் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தொலைக்காட்சி நிருபரின் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கையில், தமிழ்நாடு  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுடைய  தற்போதைய நிலை பற்றி எந்த ஒரு செய்தியும் கூறப்படவில்லை. இந்திய  பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் பங்கேற்பது பற்றி இந்திய அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும். இந்திய பிரதமர் மாநாட்டில்  பங்கேற்காமல் தவிர்க்க நேர்ந்தால், அதனால் உண்டாகும்   விளைவுகள் பற்றி பரிசிலீப்போம் என்று கூறினார். மேலும் இலங்கையில் நடக்க    இருக்கும் காமன்வெல்த் மாநாட்டை தவிர்க்க நேர்ந்தால் சர்வதேச சமுதாயத்தில் இருந்து இந்திய நாடு தனிமைப்படுத்தப்படும் என  பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

prime minister Manmohan singh may not participate in common wealth summit

Related posts