தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…

Read More

மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்

Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended சென்னை: மணல் கொள்ளை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்தரசேனன் இடைநீக்கம் செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் உள்ள பல கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் அதை தடுக்க வற்புறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூந்தமல்லி வட்டார ஆற்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 19ந் தேதி நீதிபதி மணிகுமார் காஞ்சிபுரம் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு கண்டனங்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சித்திரசேனனை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended

Read More