அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை

Madras high court Madurai bench directs Ramanathapuram revenue officials to release seized tractors

மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read More

கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…

Read More

இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…

Read More

காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்

Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu. காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் தஞ்சாவூர்: கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டனம் செய்து காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் திரு.துரை மாணிக்கம் கூறுகையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதூது எனும் பகுதியில்,…

Read More

2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…

Manmohan Singh criticised by chidambaram for 2G scam 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பூதாகரம் ஆகும் முன்பே அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை மன்மோஹன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டு உரிமங்களை ரத்து செய்யும் வரை மன்மோகன் அரசு காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் இவ்வாறு உரையாற்றினார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் முதன் முதலில் வந்தோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 122 உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,…

Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.சீதாராமன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஆர்,கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரானார். மறு உத்தரவு வரும்வரை, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரே முழு பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.…

Read More

ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???

Former Central Minister G K Vasan Plans to starts a New political Party சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் வற்புறுத்தியும் தான் போட்டியிட முடியாது என கூறி மறுத்துவிட்டார். அதனால் காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தியை தணிக்கும் வகையில் கட்சிக்காக சூறாவளி சுற்று பயணம் செய்து கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இப்போது…

Read More

ஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்

நடுவர் மற்றும் சமரச (திருத்த) மசோதா, 2021 ஐ மக்களவை நிறைவேற்றியது File name: parliament-ls.jpg

Abnormal Corruption and  Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 50–க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எவருமே எதிர் பார்க்காத இந்த படு தோல்வி அந்த கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதுவும் காங்கிரசுக்கு சாதகமான இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு , சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்கள். எனினும் அதை…

Read More

தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு: மாவட்டாட்சியர்கள் ஆலோசனை

Drinking Water scarcity in Tamil Nadu. District Collectors with Higher officials meeting organized to tackle the situation. சென்னை, மே. 2 – பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் கடும் வறட்சியால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிதண்ணீரும் மாதம் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் குடிதண்ணீருக்கு பொது மக்கள் மத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்டாட்சியர்களுடன் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பொதுப் பணித்துறை செயலாளர் சாய்குமார், நிதி துறை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையாளர்…

Read More