தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More

சென்னையில் துப்பாக்கி முனையில் மருத்துவர் வீட்டில் பணம் நகை கொள்ளை

Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…

Read More

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.சீதாராமன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஆர்,கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரானார். மறு உத்தரவு வரும்வரை, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரே முழு பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.…

Read More

சென்னையில் லேசான நில அதிர்வு : சென்னை வாசிகள் அச்சம்

Earthquake off Odisha sparks tremors, panic in Chennai வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் பல இடங்களில் பூமி அதிர்ந்தது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் புதன்கிழமை இரவு 9.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது. ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி…

Read More

லஞ்சம் வாங்கிய கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது

Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths சென்னை,மே.21 காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்போரூர் ஒன்றியத்தில் பட்டிபுலம் எனும் ஊரை அடுத்து உள்ள புது இடையூர் குப்பம் எனும் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு (NOC) தடையில்லா சான்றிதழ் எனும் அனுமதிசான்றிதல் புதுப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஆய்வு நடத்தி பள்ளிக்கு அனுமதிச்சான்று வழங்கக்கோரி பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன் திருப்போரூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்து இருந்தார். இதுசம்பந்தமாக பள்ளிக்கட்டிடங்களை ஆய்வுசெய்து அறிக்கை வழங்கும்படி கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தாசில்தார் ஆறுமுகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆய்வு செய்த மணிவண்ணன், அனுமதி சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்துவந்தார். இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகி…

Read More

ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???

Former Central Minister G K Vasan Plans to starts a New political Party சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் வற்புறுத்தியும் தான் போட்டியிட முடியாது என கூறி மறுத்துவிட்டார். அதனால் காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தியை தணிக்கும் வகையில் கட்சிக்காக சூறாவளி சுற்று பயணம் செய்து கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இப்போது…

Read More

பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு.,

RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு., புதுடில்லி:மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடும் எந்தவிதத்திலும் இருக்காது என பா.ஜ.க., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் அரசாங்க நிர்வகாக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடும் எனும் பேச்சுக்கே இடமில்லை. அரசு செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடாது. நாங்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர்களே. மரியாதையை நிமித்தமாக நான் இங்குள்ள மூத்த தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன். இது எங்களுடைய வழக்கமாக செயல்பாடுகளில் ஒன்று தான். மேலும் ஆர். எஸ்.எஸ்., இயக்கம் ஒரு தேசபற்றை வளர்க்கும் தேசிய நலன் அமைப்பு. இந்த இயக்கத்தில், நம் நாட்டினுடைய நலன்கள் பற்றி ஆலோசனை வழங்கி அதன் மூலம்…

Read More

தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு: மாவட்டாட்சியர்கள் ஆலோசனை

Drinking Water scarcity in Tamil Nadu. District Collectors with Higher officials meeting organized to tackle the situation. சென்னை, மே. 2 – பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் கடும் வறட்சியால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிதண்ணீரும் மாதம் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் குடிதண்ணீருக்கு பொது மக்கள் மத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்டாட்சியர்களுடன் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பொதுப் பணித்துறை செயலாளர் சாய்குமார், நிதி துறை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையாளர்…

Read More

டி.சி.எஸ். மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : – 850 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

uma maheswari Rape and Murder case  : 850 pages charge sheet has been filed in Chengalpet court on Tuesday in the case of a software engineer uma maheswari by IT company Tata consultancy Services (TCS) who was brutally raped and murdered in February 2014. சென்னை ஏப்ரல் 30- சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்த டி.சி.எஸ். நிறுவன மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையிலிருக்கும், கேளம்பாக்கம் பகுதி சிறுசேரி சிப்காட் வளாகத்திலிருக்கும் டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்தவர் உமாமகேஸ்வரி (வயது 24). கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியன்று இரவு 10.30-க்கு பணியை முடிந்து விட்டு…

Read More

தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலத்திற்கு மாரடைப்பு… மருத்துவமனையில் அனுமதி

Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore

Read More