இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…

Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை துவக்கம். பொதுநலவாய அமைப்புக்கான நிதியை கனடா நிறுத்தியது..

Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka. மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக இலங்கைக்கான பொதுநலவாய அமைப்பு நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.…

Read More

இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…

Read More

இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு

human rights violations against the Tamils in Sri Lanka’s war against the LTTE கொழும்பு: மனித உரிமை மீறல்கள் குறித்த பலத்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள், கனடா, இந்தியா, மற்றும் மொரீஷியஸ் நாட்டின்  பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவி்ல்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தடபுடலாக ஏற்பாடோடு கொழும்பு சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பாக ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்களை கண்டித்து இந்த காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. அதே போல் மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து…

Read More

திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டு

105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy திருச்சி அருகில் 105 வயதுடைய இலங்கை பூர்விகமாக கொண்ட மூதாட்டி ஒருவரை 10 பவுன் தங்க நகையை களவாட கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. திருச்சியை அடுத்து உள்ள மாத்தூர் அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமதி.பெரியநாயகி. இவருக்கு வயது 105. இவர் இலங்கையை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் இந்தியாவில் குடியேறிவிட்டார். இவருடைய கணவவரும் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உண்டு. இதில் 3 பிள்ளைகள் இலங்கையிலேயே இறந்துவிட்டனர். மற்ற அனைவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மூதாட்டி பெரியநாயகி வீட்டில் தனியாக தான் இருந்து வந்தார். தனது மகன்கள் அனுப்பும் பணத்தை வைத்து தானாக சமையல்…

Read More