ரூ .500, ரூ 1000 இனி செல்லாது : பாரத பிரதமர் மோடிஅறிவிப்பு

PM Narendra Modi declared all Rs 500 and Rs 1000 notes to be invalid from 12 midnight tonight. இன்று முதல் (08 - நவம்பர் - 2016)

புது தில்லி : ஆச்சர்யத்தக்க விதமாக ரூ .500, ரூ 1000 இன்று முதல் (08 – நவம்பர் – 2016) செல்லாது என  பாரத பிரதமர் இன்று அறிவித்துள்ளார். ரூ .500, ரூ 1000 (08 – நவம்பர் – 2016) முதல் செல்லாது : பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு இன்று ரூ 1000 மற்றும் ரூ .500 நள்ளிரவு முதல் செல்லாது எனவும் அதற்கு பதில் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் புழக்கத்தில் வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாறாக கருப்பு பணம் பணமதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கறுப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் லஞ்ச ஊழல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக அழிக்கும் என நம்பப்படுகிறது. தேசத்திற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், மோடி ரூ .500…

Read More

இலங்கை தங்கும் விடுதியில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த இந்திய தம்பதியினர்

Indian couple found dead in Sri Lanka இலங்கையில், இந்தியத் தம்பதியர் மர்மமான முறையில் விடுதி ஒன்றில் இறந்து கிடந்ததை கொழும்பு போலீஸார் கண்டறிந்தனர். கொழும்பு நகரின் வல்லவெத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 27ம் தேதி, 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் தம்பதியராக வந்து ஒரே அறையில் தங்கியிருந்தனர். வியாழக்கிழமை இரவு விடுதி அறைக்குள் சென்ற இருவரும் வெள்ளிக்கிழமை காலை வெகு நேரம் வரை அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதையடுத்து, சந்தேகமடைந்த விடுதியின் உரிமையாளர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து அறைக்குள் சென்று பார்த்தபோது தம்பதியர் இறந்து கிடந்ததைக் கண்டனர். மர்மமான முறையில் அந்தத் தம்பதியர் இறந்திருப்பதாக இலங்கை போலீஸார் தெரிவித்தனர். அந்த தம்பதிகள் சூதாட்ட கேளிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாக விசாரணையில்…

Read More

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம்…

Read More

இலங்கையில் திடீரென பெய்த மீன் மழை

Fish rain down on Sri Lanka village இலங்கையின் மேற்கு பகுதியில் மீன் மழை பெய்துள்ளது. இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ளது சிலா மாவட்டம். இங்குள்ள சில கிராமங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது தொப் என்ற சத்தத்துடன் வீட்டின் கூரைகள் மீது ஏதோவிழுவதை அம்மக்கள் உணர்ந்துள்ளனர்.  இதையடுத்து வெளியே சென்று பார்த்தபோது வானத்தில் இருந்து மீன்கள் சாரை சாரையாக வந்து விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆச்சரியத்துடன் மீன்களை சேகரிக்க தொடங்கினர். 50 கிராம் எடையுள்ள ஐந்து முதல் 8 செ.மீ. நீளமுள்ள சிறிய வகை நன்னீர் மீன்கள் என்று தெரியவந்தது. பலத்த காற்றடித்தபோது ஏரிகளில் இருந்த மீனை காற்று எடுத்து வந்து கிராமத்தின் மீது வீசியிருக்கலாம். அதுதான் இந்த மீன் மழைக்கு காரணம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள். இலங்கையில்…

Read More

நரேந்திர மோடி ஏன் ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் இருக்கிறார்? : – உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி

pazha nedumaran upset over modi not speaking about ezham tamils ஈழத் தமிழர் பிரச்சனை சம்பந்தமாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் ஓர் பிரபல பத்திரிக்கைக்கு நெடுமாறன் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், பா.ஜ.க தங்களது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றியும், இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் இந்திய தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது போன்ற பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க தலைமை இந்த பிரச்னைகளை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. மேலும், பிரசாரத்திற்கு தமிழகம் வந்த நரேந்திரமோடியும் மேற்கூறிய பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் நேரடியாக தெரிவிக்கவில்லை. இது நரேந்திர…

Read More

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை துவக்கம். பொதுநலவாய அமைப்புக்கான நிதியை கனடா நிறுத்தியது..

Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka. மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக இலங்கைக்கான பொதுநலவாய அமைப்பு நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.…

Read More

இலங்கை தமிழர்கள் பகுதியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்

After Mass Grave Found in Sri Lanka, Fears of More மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்களின் எலும்புக் கூடுகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல பல புதைகுழிகள் அந்தப் பகுதி முழுவதும் உள்ளதைப் பார்த்து, கண்ணிவெடி அகற்றும் பணியில் உள்ள வெளிநாட்டவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது. என்றாலும் தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என்று சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியது. அதன்படி தமிழர்களின்…

Read More