ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பல உறுப்பு நாடுகள் ஆதரவு

ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பல உறுப்பு நாடுகள் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் (யு.என்.எஸ்.சி.) இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு, அந்தக் கவுன்சிலில் இருக்கும் பல் வேறு உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சிலில் பிரான்ஸ், சீனா, இரஷிய கூட்டமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன. மேலும் 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க்கில், ஐ.நா. பொதுச் சபை கூட்டம், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை விரிவு படுத்துவது பற்றி ஐம்பதுக்கும் அதிகமானோர் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், பிரேசில், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய எழுச்சி பெற்று வரும் நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற பல்வேறு நாடுகள் ஆதரவை அளித்துள்ளனர். இதில் குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் பிரான்சும், பிரிட்டனும், இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.

அக்கூட்டத்தில், பிரிட்டனின் ஐ.நா.வுக்கான தூதர் மேத்யூ ரைகிராஃப்ட் கூறுகையில், “”விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றால் நிரந்தர உறுப்பினர்களுடைய எண்ணிக்கை கூடுதலாக்க வேண்டும்;
மேலும் கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் தெரஸா மே இந்தியா வந்திருந்த போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் இது சம்பந்தமாக விரிவாக விவாதித்தார்” என கூறினார்.

அதே போல், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ் துணைத் தூதர் அலெக்ஸிஸ் லேமக்கும், ஆதரவு தெரிவித்தார்.

India’s offered for a perpetual seat in an improved UN Security Council has gotten a solid support from numerous UN part states, including the UK and France, who accentuated that the world body’s top organ must mirror the rise of new worldwide forces. More than 50 speakers shared their proposals, points of view and worries over change of the 15-country UNSC amid a General Assembly session here a week ago.

Related posts