கேரளாவில் 250 குழந்தைகளை கல்விக்கட்டணம் செலுத்தாததால் அறையில் பூட்டி வைத்து பள்ளி நிர்வாகம்

About 250 students locked up in a Kerala school for not paying fees

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால், 8 வயதுள்ள சுமார் 250 மாணவர்களை தனி அறையில் பூட்டி வைத்து, அவர்களுக்கு குடிநீர் கூட வழங்காமல் தண்டனை அளித் துள்ளது பள்ளி நிர்வாகம். கேரள மாநிலம் கோழிக்கோட்டில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் இச் செயலால் 2 மாணவர்கள் மயக்க மடைந்தனர். கருத்தரங்கக் கூடத்தில் அடைக்கப்பட்டதால் மயக்கமடைந்த 8 வயது மாணவி இஷா பாத்திமா கூறும்போது, “எங்களை அடைத்து வைத்திருந்த அறைக்குள் கடும் வெப்பம் நிலவியது. எங்களுக்கு குடிக்க நீர் தர மறுத்துவிட்டனர். உட்காரவும் இடமில்லை. அது தொடர்பாகக் கேட்டபோது, ஒருவர் மடி மீது மற்றவர் அமருங்கள் எனக் கூறிவிட்டனர்” என்றார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மனருல் ஹுதா அறக்கட்டளை சார்பில் இந்தப் பள்ளி நடத்தப்படு கிறது. “சிபிஎஸ்இ பள்ளியின் அங்கீகாரம் கடந்த மார்ச் மாதமே முடிந்து விட்டது. அதை இன்னும் புதுப்பிக்கவில்லை. எனவே தான் கட்டணம் செலுத்த தாமதித்தோம்” என பெற்றோர்கள் தெரிவித்துள் ளனர். கடந்த திங்கள்கிழமை கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தனர். அதுதொடர்பாக விசாரிக்க, நேற்று முன்தினம் சில பெற்றோர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதுதொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஹதாமுல் நஜு கூறும்போது, “மாண வர்கள் வகுப்பறையில் இருப்பதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார். ஆனால், ஏராளமான மாணவர்கள் கருத்தரங்கக் கூடத்தில் அடைக்கப் பட்டிருந்தனர்” என்றார்.

பள்ளி நிர்வாகம் மறுப்பு பள்ளியின் இயக்குநர் டி.எம். அபுபக்கர் இதுதொடர்பாகக் கூறும் போது, “கட்டணம் செலுத்தாத மாணவர்களை கருத்தரங்கக் கூடத்தில் ஒன்று கூடச் சொன்னோம். அவர்களிடம் பள்ளி முதல்வர், கட்டணம் செலுத்துவதற்கான இறுதிநாள் குறித்து பேசவிருந்தார். அப்போது, சில பெற்றோர்கள் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த கருத்தரங்க அறையின் கதவு ஜன்னல்களை அடைத்து போராட்டம் நடத்தத் தொடங்கினர்” என்றார். இச்சம்பவம் தொடர்பாக மருத் துவக்கல்லூரி காவல் நிலையத்தில், பள்ளி முதல்வர் பி. அப்துல் ரஹ்மான், துணை முதல்வர் கிரிஜா சுரேந்திரன் கணக்காளர் ஷாஜ கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட காவல்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது.

About 250 students locked up in a Kerala school for not paying fees

Nearly 250 children were allegedly locked up in the conference hall of a school in Kerala for over two hours on Tuesday. The principal of the Hilltop Public High School in Kozhikode, Abdul Rahman, was arrested and is now out on bail. He claims he called the children to the hall as they did not pay the fees. “Usually, when children don’t pay the fees, the teachers call them individually and speak to them. Then the parents are called. In this case since there were so many children, in order to avoid disturbance to other students, we called all the students who didn’t pay fees into the conference hall,” said Mr Rahman. Furious parents met Chief Minister Oommen Chandy yesterday and demanded strong action. The conference hall had an asbestos ceiling and no fan, and the students were not let out even to use the toilet. Two students were taken to the hospital after they fainted. “We were told by the principal that if we didn’t get the fees tomorrow, he would keep us standing outside for all the seven periods. We did not even have a fan,” said Jamima Haider, a student. J Jabbar, another student’s father said, “Most of the parents had decided not to pay the fees because it was the last semester and the school gave us a notice that it would shut down soon. Over two hundred children were locked inside the hall without being allowed to go the bathroom.” The notice from the school management to parents in December said the school would be shut down because of the “impossibility to secure the required additional land for the school in and around the present campus.” The police say they are investigating what happened. “There seems to be some issue between parents and the management of the school regarding the shifting of school complex. But the allegation is serious,” said a senior police officer.

.

Related posts