நிச்சயம் செய்தபின் திருமணத்துக்கு மறுத்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

chennai court sentenced 5 years imprisonment youngster

chennai court sentenced 5 years imprisonment youngster
chennai court sentenced 5 years imprisonment youngster

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் தென்னரசு (வயது29). இவர், அதே பகுதியில் உள்ள ‘பீரோ’ விற்பனை நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் ஷீலா என்ற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்பெண்ணை காதலித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது 6 மாதத்துக்குள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதற்கிடையில், ஆவடியில் உள்ள தன் சகோதரன் வீட்டுக்கு ஷீலாவை அழைத்துச் சென்று அங்கு அவருடன் தென்னரசு உடல் உறவுக் கொண்டார். இதன்பின்னர், அவரை திருமணம் செய்ய தென்னரசு மறுத்து விட்டார். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து, ஷீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தென்னரசு மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசதீஷ், ‘தென்னரசுக்கு எதிராக கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கவில்லை. ஆனால், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து’ நேற்று தீர்ப்பளித்தார்.

chennai court sentenced 5 years imprisonment youngster

[divide]

Related posts