சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery.

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery.
Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்து வருகிறார்.

பெண் எஸ்ஐயான புவனேஸ்வரி நேற்று மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். மதியம் 2 மணி அளவில் வீடு திரும்பியபோது பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்திருப்பதை பார்த்து அதிர்ந்தார். உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. போலீஸ் எஸ்ஐக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது நகை, அமெரிக்காவில் இருந்துமகன்கள் அனுப்பிய பணத்தில் வாங்கிய நகை என மொத்தம் 110 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி, விலை உயர்ந்த 2 வாட்ச் மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அலறியபடி அங்கேயே மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர். கண் விழித்த ராஜேஸ்வரி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கூறி கதறி அழுதார்.தொடர்ந்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஐஸ்ஹவுஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் நன்கு தெரிந்தவர்கள்தான் நோட்டம் விட்டு ராஜேஸ்வரி இல்லாத நேரத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தெரிந்தது. சென்னையில் கொள்ளை சம்பவங்கள் குறைந்திருப்பதாக கமிஷனர் ஜார்ஜ் நேற்றுதான் கூறினார். இந்நிலையில் பெண் எஸ்.ஐ. வீட்டிலேயே கொள்ளை நடந்திருப்பது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery.

Related posts