இந்தியா பாகிஸ்தான் எல்லை சிந்து மாகாணத்தில் வறட்சியலும், சுகாதார குறைபாட்டாலும் 11 மாதங்களில் 275 குழந்தைகள் பலி

275 children dead poor health care pakistan sindh state indian border

275 children dead poor health care pakistan sindh state indian border
275 children dead poor health care pakistan sindh state indian border

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வறட்சியின் பாதிப்பாலும், சுகாதார குறைபாட்டாலும் 275 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரமுள்ள சிந்து மாகாணத்தின் தார்பார்க்கர் மாவட்டம், அகன்ற பாலைவனப் பிரதேசமாகும். இங்கு வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 35 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது கடந்த 1998 ஆம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. வானம் பார்த்த பூமியாக உள்ள தார்பார்க்கர் மாவட்டம், பெரும்பாலும் பருவமழையை மட்டுமே நம்பியுள்ளபோதிலும், காலத்தில் பெய்ய வேண்டிய பருவமழை, இப்பகுதியில் வசிக்கும் மக்களை ஒவ்வொரு ஆண்டும் வஞ்சித்தே வந்துள்ளது.

இதனால், உண்டான வறட்சி மற்றும் சுகாதார குறைபாட்டின் விளைவாக ரத்தசோகை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தத்தில் நோய்க்கிருமித் தொற்று, பிறக்கும்போது ஏற்படும் சுவாசக் கோளாறு போன்ற உபாதைகளால் கடந்த 11 மாதங்களில் மட்டும் 275 குழந்தைகள் பலியானதாகவும், இந்த குழந்தைகள் அனைத்தும் ஐந்து வயதுக்குட்பட்டவை என்றும் தார்பார்க்கர் மாவட்ட துணை கமிஷனர் ஆசிப் ஜமீல் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு தாய் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்த அநியாய உயிர்ப்பலிக்கு இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடும், நிர்வாக சீர்கேடும்தான் காரணம் என்று பரவலாக குற்றம்சாட்டப்படுகின்றது.

275 children dead poor health care pakistan sindh state indian border

At least 275 children have died in the last eleven months due to an unabated drought and lack of health care facilities in a remote Sindh province district, home to thousands of minority Hindus in Pakistan. The Tharparkar district, close to Indo-Pak border, is mostly a desert area where life depends on rains which were scanty for many months.

Related posts