சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலி

Two killed as portion of old building collapses in Chennai

Two killed as portion of old building collapses in Chennai
Two killed as portion of old building collapses in Chennai

சென்னை பாரிமுனையில் பலசரக்குக் கிடங்கின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை பாரிமுனை மலையபெருமாள் கோயில் தெருவில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான பலசரக்குக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலசரக்குக் கடை ஊழியர் ராஜா (50), அருகிலுள்ள தேங்காய் கடையைச் சேர்ந்த சுபாஷ் (24), குமார் (50) ஆகிய மூவரும் இருந்தனர். அப்போது அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் மதில் சுவர் திடீரென சரிந்து, கிடங்கின் மேற்கூரை மீது விழுந்தது.

இதில், இடிபாடுகளில் மூவரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் கோட்ட தீயணைப்புத் துறை அதிகாரி முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் ராஜா காயங்களுடன் மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் சுபாஷ், குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து, எஸ்பிளனேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டடத்தின் உரிமையாளர் ராமமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவப் பகுதியை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் ஆய்வு செய்தார்.

Two killed as portion of old building collapses in Chennai

Two men, who were working at an onion and jaggery godown in Parry’s Corner here, died when a portion of an adjoining old building fell on them on Sunday night. The deceased were identified as Kumar, 50, and Subhash, 24, both hailing from Villupuram. Kumar died on the spot when the portion of the old building fell on an asbestos shed attached to the godown while Subhash succumbed to his injuries at the Government General Hospital here. Another worker, identified as Rajiv, escaped unhurt.

Others :

Related posts