தமிழகத்தின் எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் குழு விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி புதிய வழக்கு

Petition requesting order to inquire Mineral resource related irregularities in tamilnadu by IAS officer Sagayam and Team at Madras High Court

தமிழகம் முழுவதிலும் நடந்த எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் தலைமை தாங்கிய குழுவே விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

Petition requesting order to inquire Mineral resource related irregularities in tamilnadu by IAS officer Sagayam and Team at Madras High Court

பசுமைத் தாயகம் எனும் ஓர் சமூக சேவை அமைப்பைச் சார்ந்த திரு.அருள் எனும் நபர் இந்த இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சட்டவிரோதமான முறையில் கனிமவளங்களை பயன்படுத்தியும் விற்றும் பலகோடிகளை ஏப்பம் விட்ட பல சமூகவிரோத செயல்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருவதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் மதுரையில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் முறைகேடு மட்டுமல்லாமல், கல்குவாரி, கனிம மணல் மற்றும் மணல் குவாரி உள்பட முறைகேடுகள் அனைத்தையும் ஐ ஏ ஸ் அதிகாரி திரு.சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரபட்டிருக்கிறது.

மேலும், இதே கோரிக்கையை முன்வைத்து சமூகசேவகர் டிராஃபிக் ராமசாமி தொடுத்துள்ள பொதுநல வழக்கு மனுவில், தங்களுடைய மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திரு.டிராஃபிக் ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என திரு.டிராஃபிக் ராமசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த இரு மனுக்களையும் சேர்த்து ஒரே வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்ப படுகிறது.

Petition requesting order to inquire Mineral resource related irregularities in tamilnadu by IAS officer Sagayam and Team at Madras High Court

Related posts