சென்னையில் இடிந்து விழுந்த11 மாடிகட்டிட உரிமையாளர் மனோகரன்அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம்

Documents related to Manoharan, owner of collapsed 11 storey building in Moulivakkam was disappeared.

சென்னையில் இடிந்து விழுந்த, ‘பிரைம் சிருஷ்டி’ நிறுவனத்தின்11 மாடி கட்டிட உரிமையாளர் மனோகரன் அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் தேடுகின்றானர்.

Documents related to Manoharan, owner of collapsed 11 storey building in Moulivakkam was disappeared

இரு நபர் குழு:

11 மாடி கட்டிடம் கடந்த மாதம், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், 61 பேர் பலியாயினர். இது தொடர்பாக, கட்டிட உரிமையாளர் மனோகரன் மற்றும்அவர் மகன் முத்து ஆகியோரை கைது செய்துள்ளனர். மனோகரன் மதுரையைச் சேர்ந்தவர் மற்றும் அவரது நிறுவனம் துவங்கியதும் மதுரையென்பதால், அவரின் விவரங்களை சேகரிக்கும் பணி மதுரை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் தலைமையில், இருவர்குழு நியமிக்கப்பட்டு, பிரைம் சிருஷ்டி நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை, ஆய்வு செய்தனர். அங்கு வீடு வாங்கியவர்கள் கூறிய தகவலின் படி, அவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதியுடன் கட்டப்பட்டதென மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், எந்த ஆவணமும், மாநகராட்சிடமில்லை. மூன்று குடியிருப்புகளும் கடந்த, 1999 முதல் 2004க்குல் தான், கட்டப்பட்டுள்ளன,  ஆனாலும், அவைபற்றிய ஆவணங்கள் மட்டும் மாயமானது புதிராக உள்ளது. ஏற்கனவே, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு, உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதியில்லாமல், ஏராளமான அடிக்குமாடி கட்டிடங்களுக்கு தன்னிச்சையாக அனுமதிவழங்கியதாக, குற்றச்சாட்டு இருக்கிறது.இந்நிலையில், ஆவணங்கள் காணாமல் போனது, மேலும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

நான்கு நாட்களாக தேடப்படும் ஆவணங்கள்:

நான்கு நாட்கள் கடந்த பின்னரும் மாநகராட்சி அதிகாரிகள், ஆவணங்களை இதுவரை கண்டு பிடிக்கவில்லை. கட்டிடங்கள் அனுமதி தொடர்பான ஆவணங்கள் மாநகராட்சி பதிவுகளில் இடம்பெறுவது வழக்கம். அவ்வாறு இருக்கும்போது, மனோகரனின்ஆவணங்கள் மட்டும் இல்லாமல் போனது ஆச்சரியம் தருவதாகவுள்ளது. விசாரணைக் குழுவிலுள்ள, உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமியிடம் இதைப் பற்றிக் கேட்ட போது, ”கட்டுமான நிறுவனம் மற்றும் அதின் உரிமையாளர் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கின்றோம். சில ஆவணங்கள் கிடைத்த உடன், முழுவிவரம் தெரியும்” என்றார்.

அரசியல் செல்வாக்கு :

மனோகரன், தனிநபராக கட்டுமானத்தொழிலை நடத்தியிருந்தாலும், பின்னணியில் அரசியல் செல்வாக்கும் பக்கபலமாக இருந்துள்ளது. ஆகவே தான், ஆட்சிமாறிய போதும், மதுரையிலிருந்து, சென்னைக்கு தொழிலை விரிவுபடுத்தும் அளவுக்கு, செல்வாக்கு இருந்துதிருக்கிறது. ஆகவே, தற்போது ஆவணங்கள் மாயமாகியுள்ளதிலும், அரசியல் பின்னணி இருக்ககூடுமென அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

English Summary : Collapsed 11 storey building owner Manoharan’s basic business-related documents, were disappeared. It was searching by the Corporation officials. The ‘prime product’ 11-storey apartment building was collapsed, last month, 28 in which 61 people were killed.

In connection to it, the 11 storey building owner Manoharan, including pearl and his son were arrested. Manoharan and his company’s career began on Madurai, therefore Madurai Corporation was ordered to search for the information of him. Along with Assistant commissioner two persons committee was appointed to examine it. From the Owner who purchased those building were said that the building are constructed by approval from the local authority. Even though those three buildings were built from the period of 1999 to 2004, there is no trace of the documents seems like a mystery. Already, there was a complaint on Local Approval Commission regarding its approval issuance to many buildings without permission of the higher Committee. The missing documents have increased this suspicion more. Even after the lapse of Four days on search, the district authorities are still searching for documents. Investigative Committee member, Palanichamy said as follows ” The construction company and its owner details are being investigated. After some documents found, we will come to know the whole story,” he said.

Manoharan has started and running the construction industry individually, in the context of political influence. So only after the he could able to expand his business to Chennai. Currently, the officials suspect that missing of documents would have been the reason political background.

Documents related to Manoharan, owner of collapsed 11 storey building in Moulivakkam was disappeared.

Advertisement : For vacant land with DTCP Approval. Contact 9952984848

Related posts