மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?

 

Railway line between Avadi and Sriperumbudur – Will it get renewed in Modi’s Period?

Sriperumbudur
Sriperumbudur Railway Line

மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?

-என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் பொதுமக்கள், பயணிகள் மற்றும் தொழில்நிறுவணங்கள்.

ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் பல தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலைகள் வயலாக மட்டுமே அனுப்ப படுகிறது. இப்பொருட்கள் ரயில்களில் அனுப்ப வேண்டும் என்றால் சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை எடுத்துச்சென்று, பிறகு சரக்கு ரயில்களில் ஏற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அங்குள்ள தொழில் நிறுவனங்கள் இப்பொருட்களை ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்தே நேரடியாக எடுத்துச்செல்ல தனி ரயில் பாதை அமைத்து தருமாறு கோரிக்கையளித்தனர்.

ரூ. 600 கோடி செலவில் புதிய பாதை

ரயில்வே நிர்வாகம், அக்கோரிக்கையை ஏற்று, ரூ. 600 கோடி செலவில் ஆவடியிலிருந்து பூந்தமல்லி வழியாக  ஸ்ரீபெரும்புத்தூருக்கு ரயில் பாதை அமைக்க தீர்மானித்தது. இந்த அறிவிப்பை முன்னால் ரயில்வே அமைச்சர் திரு.முனியப்பா வெளியிட்டார். ஆனால், அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தொழில் வளர்ச்சி

இதுகுறித்து திரு. மோகன் ராம், மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் கூறியதாவது: “இத்திட்டம் இரண்டாண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால், போதிய நிதி இல்லை என்பதால், இதற்கான பணிகளை துவங்கவில்லை. இந்த ரயில் பாதை அமைத்தல், பூந்தமல்லி, ஒரகடம் மற்றும் திருமழிசை பகுதிகள் மேலும் வளர்ச்சி அடையும்.”

சுற்றுலா தலம்

ஸ்ரீபெரும்புத்தூரில் மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைபவிடம் உள்ளது மற்றும் ஆன்மிக சுற்றுலா தலமான காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்து 18 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இச்சுற்றுலா தலங்களை காண, நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ரயில் மூலம் சென்னை வரை வந்து, பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் செல்கின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புத்தூருக்கு புதிய ரயில் பாதையை அமைத்தால் சுற்றுலா பயணிகள் பயனடைவதோடு ரயில்வே நிர்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும். மேலும் இப்புதிய ரயில் திட்டத்தை காஞ்சிபுரம் வரை நீட்டித்தால், சுற்றுலா பயணிகள் பயனடைவதோடு அங்குள்ள தொழில் வளமும் பெருகும். இதன் மூலம், சென்னை கடற்கரை – ஆவடி – ஸ்ரீபெரும்புத்தூர் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – தாம்பரம் – எழும்பூர் – சென்னை கடற்கரை என சுற்றுவட்ட ரயில் போக்குவரத்தை இயக்க முடியும்.
எனவே, புதிய ரயில்வே அமைச்சர், சதானந்த கவுடா போதிய அளவு நிதி ஒதுக்கி, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு திரு.மோகன் ராம் கூறினார்.
ஏற்கெனவே, ஸ்ரீபெரும்புத்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதால் அப்பகுதியில் நிலங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆவடி – ஸ்ரீபெரும்புத்தூர் ரயில் பாதை திட்டம் மேலும் நிலங்களின் விலையை அதிகரித்து வருகிறது. அத்துடன் புறநகர் பகுதிகளிலும் நாளுக்கு நாள் மனைகளின் விலை அதிகரித்து வருவதால், காலம் தாழ்த்தாமல், இத்திட்டத்தை விரைந்து முடித்தால் திட்ட செலவு குறையும்.
A New railway line between Avadi – Sriperumbudur has been announced during the budget of the year 2013-14 for about 600 Crores. But latter on it was not implemented. As new government has formed, people are expecting the Government to implement the announced Railway Line, So that the people travelling across Sriperumbudur will be benefited. Mr. Mohan Ram, Chief Safety officer of Central Railways says that “As the increase in the number of people travelling towards Sriperumbudur from various parts of the country for visiting Rajiv Gandhi Memorial as well as to visit holy pilgrimage place Kanchipuram. Those peoples reaching chennai through train later they have to get bus to reach Sriperumbudur. This railway line scheme will reduce the difficulties as well as it will increase the income to the Railway Department. Also this Railway line will improve the industrial growth in Oragadam, Sriperumbudur and its outskirts. If the Government has extended the scheme up to Kanchipuram, people will be more beneficial and also it will increase the production in Kanchipuram”. He also said the new Railway minister should allocate the required money and ensure the fast progress. This New Railway Line scheme and the newly proposed airport in Sriperumbudur has increased the rates of the land in Sriperumbudur and its outskirts. So faster implementation of this scheme will reduce the cost of the project.
Advertisement: For land sale in Sriperumbudur, contact 9952984848 or visit www.societylayouts.wordpress.com

Related posts