துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து 200 பேர் பலி

Death toll in Turkish mine blast rises above 200, many still trapped

 Death toll in Turkish mine blast rises above 200, many still trapped

மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் அலறிஅடித்து அங்கும் இங்குமாக ஓடினர். தீ பிடித்ததால் உள்ளே இருந்தவர்களால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தது. மீட்பு படைனர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 200 பேர் பலியாகியுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர்கள் உள்ளே இன்னும் சிக்கி தவிக்கின்றனர் என்றும் மனிசா மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இதுவரை 360 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. 80 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரது நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் சுரங்கப் பகுதிக்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மருத்துவமனைக்கு வெளியிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் முத்தமிட்டு அழைத்து சென்றனர். சுரங்கத்திற்குள் சிக்கிருப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க உள்ளே சுத்தமான காற்று செலுத்தப்படுகிறது. இதற்கிடையே நிலக்கரி சுரங்கத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. இஸ்தான்புல் நகருக்குத் தெற்கே 250 கிமீ தொலைவில் உள்ள சோமாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த விபத்து துருக்கி சுரங்க விபத்து வரலாற்றில் மிக மோசமான விபத்து என்று கூறப்படுகிறது. சுரங்கத் தொழிலாளர்கள் ஷிப்ட் மாற்றும்போது இந்த விபத்து ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கார்பன் மோனாக்சைடு கசிவினால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக இல்டிஸ் தெரிவித்தார். மின்வினியோக யூனிட் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயினால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட இதே போன்ற விபத்தில் 263 பேர் பலியானதற்குப் பிறகு துருக்கி வரலாற்றில் மிக மோசமான சுரங்க விபத்து இது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Death toll in Turkish mine blast rises above 200, many still trapped

Rescuers desperately raced against time to reach more than 200 miners trapped underground Wednesday after an explosion and fire at a coal mine in western Turkey killed at least 201 workers, authorities said, in one of the worst mining disasters in Turkish history.  Energy Minister Taner Yildiz said 787 people were inside the coal mine in Soma, some 250 kilometres (155 miles) south of Istanbul, at the time of the explosion and 363 of them had been rescued so far.“Regarding the rescue operation, I can say that our hopes are diminishing,” Yildiz said.  Turkey’s worst mining disaster was a 1992 gas explosion that killed 263 workers near the Black Sea port of Zonguldak.  As bodies were brought out on stretchers, rescue workers pulled blankets back from the faces of the dead to give jostling crowds of anxious family members a chance to identify victims. One elderly man wearing a prayer cap wailed after he recognized one of the dead, and police restrained him from climbing into an ambulance with the body.  President Recep Tayyip Erdogan declared three days of national mourning, ordering flags to be lowered to half-staff. Erdogan postponed a one-day visit to Albania and planned to visit Soma instead.  At least 80 miners were injured, including four who were in serious condition, Yildiz told reporters in Soma, were he was overseeing operations by more than 400 rescuers.  The explosion tore through the mine as workers were preparing for a shift change, officials said, which likely raised the casualty toll because there were more miners inside the mine than usual.  The minister said the fire was still blazing inside the mine, 18 hours after the blast. The air around the mine swirled with smoke and soot.The deaths were caused by carbon monoxide poisoning, Yildiz said.  An injured rescue worker who emerged alive was whisked away on a stretcher to the cheers of onlookers.  Yildiz said rescue operations were hindered because the mine had not completely been cleared of gas.  Authorities say the disaster followed an explosion and fire caused by a power distribution unit.  Nurettin Akcul, a mining trade union leader, told HaberTurk television that Turkey was likely facing its worst mining accident ever.  Yildiz said earlier that some of the workers were 420 metres (460 yards) deep inside the mine. News reports said the workers could not use lifts to escape because the explosion had cut off power.  Workers from nearby mines were brought in to join the rescue operation. One 30-year-old man, who declined to give his name, said he rushed to the scene to try to help find his brother who was still missing early Wednesday. He said he was able to make it about 150 metres (500 feet) inside before gasses forced him to retreat.  “There is no hope,” he said with tears in his eyes.  During the night, people cheered and applauded as some trapped workers emerged, their faces and hard-hats covered in soot.Dozens of ambulances drove back and forth to carry the rising number of bodies as well as injured workers.  Emine Gulsen, part of a group of women who sat wailing near the entrance to the mine. chanted in song, “My son is gone, my Mehmet.” Her son, Mehmet Gulsen, 31, has been working in the mine for five years.  Mehmet Gulsen’s aunt, Makbule Dag, held out hope. “Inshallah” (God willing), she said.  Police set up fences and stood guard around Soma state hospital to keep the crowds away.  SOMA Komur Isletmeleri A.S., which owns the mine, said the accident occurred despite the “highest safety measures and constant controls” and added that an investigation was being launched.  “Our main priority is to get our workers out so that they may be reunited with their loved ones,” the company said in a statement.  Turkey’s Labor and Social Security Ministry said the mine had been inspected five times since 2012, including in March of 2014, and that no issues violating work safety and security were detected.  The country’s main opposition party said that Erdogan’s ruling party had recently voted down a proposal for the establishment of a parliamentary inquiry into a series of small scale accidents at mines around Soma.  Mining accidents are common in Turkey, which is plagued by poor safety conditions.

Related posts