ஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்

நடுவர் மற்றும் சமரச (திருத்த) மசோதா, 2021 ஐ மக்களவை நிறைவேற்றியது File name: parliament-ls.jpg

Abnormal Corruption and  Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh

புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 50–க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எவருமே எதிர் பார்க்காத இந்த படு தோல்வி அந்த கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதுவும் காங்கிரசுக்கு சாதகமான இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் கூறியுள்ளார்கள்.

Abnormal Corruption and  Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh

மேலும் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு , சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்கள். எனினும் அதை காங்கரஸ் காரிய கமிட்டி நிராகரித்தது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினுடைய காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது. அப்பொழுது தனது ஆட்சியின் போதாமைகளுக்கு தானே பொறுப்பு ஏற்பதாக மன்மோகன் சிங் தெரிவித்தார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி கூறியுள்ளார்.

ஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்

மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்விக்கு ஊழலும், விலைவாசி உயர்வும் தான் முக்கிய காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார் எனவும் ஜனார்தன் திவேதி கூறியுள்ளார்.

ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு பற்றி மக்களிடம் நாம் சரியாக எடுத்து கூறவில்லை.அதனால் தான் இது போன்ற நிலைமை உண்டாகி உள்ளது என மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாராட்டியுள்ள மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் செய்த முயற்சிகள், பங்களிப்புகள் மற்றும் அளித்த ஆதரவு தமக்கு மிகவும் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Congress failure in Parliament election 2014 is due to Abnormal Corruption and  Price hike lead to

Abnormal Corruption and  Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh

Abnormal corruption and Price Hike were the main issues on which the UPA government failed to Control, outgoing Prime Minister Manmohan Singh told the a famous media on Monday, accepting shortcomings of his government that led to the poll drubbing. Congress general secretary Janardan Dwivedi, quoted Manmohan Singh as saying in the meeting, “I take responsibility for the shortcomings of my government.” “We were not able to communicate satisfactorily with the people on the issues of Abnormal price hike and corruption, and the critical situation that arose because of that ,” said the Prime Minister Manmohan Singh.

Advertisement :

Builders and Building Contractors in Chennai : Bestsquarefeet.com

Related posts