பழனி அருகே தம்பதியை கட்டி போட்டு 100 பவுன் நகை திருட்டு

gang loots 100 sovereigns jewels cash from financier s house

gang loots 100 sovereigns jewels cash from financier s house

பழனி அருகே கணவன்-மனைவி யை கட்டிப்போட்டு 100 பவுன் நகை யை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

பழனி அருகே உள்ள தாழையூத் தைச் சேர்ந்தவர் அப்புகுட்டி (எ) கார் த்திகேயன் (44). தி.மு.க. பிரமுகரான இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்திரா (35). மகள் கள் நிவஞ்சிதா (13), அனுமிதா (9).கார்த்திகேயனின் வீடு அரண் மனை தோட்டம் என்ற இடத்தில் உள்ளது. குழந்தைகள் இருவரும் கோடை விடுமுறையையொட்டி கீதம் பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டனர். திங்களன்று கார்த்திகேயன் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 9.30 மணியளவில் காரில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி இந்திரா வாசல் கதவை பூட்டிவிட்டு திரும்பும்போது முகமூடி அணிந்தி ருந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

உடனே கார்த்திகே யன் செல்போனை எடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க முயன் றுள்ளார். கொள்ளையர்கள் அவரி டம் இருந்து செல்போனை பறித்துள் ளனர். அந்த சமயத்தில் மேலும் 5 முக மூடி கொள்ளையர்கள் அங்கு வந்துள் ளனர். அவர்கள் இந்திராவிடம் இருந்த செல்போனையும் பறித்துள்ளனர். முகமூடி கொள்ளையர்கள் ஏழு பேரும் கத்தி முனையில் கணவன்–மனைவி இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டு சேலையால் அவர் களது வாயைப் பொத்தியுள்ளனர். பின்னர் ஒவ்வொரு அறையாகச் சென்று, பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்துள்ளனர்.நிதி நிறுவனம் நடத்தும் உன்னு டைய வீட்டில் இவ்வளவு பணம் தான் உள்ளதா? என்று கார்த்திகே யனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் வீட்டில் இவ்வளவு பணம் தான் உள்ளது என்றார். இந்திராவை மிரட்டியபோது அவர் தாலிக்கொடி யை கழற்றி கொடுக்க முயன்றார். அதை கொள்ளையர்கள் ஏற்க வில்லை.பின்னர் அவர்கள் கதவை பூட்டி விட்டு வெளியே நிறுத்தியிருந்த கார்த்திகேயனின் காரை எடுத்துக் கொண்டு தப்பினர்.

காரை பழனி பேருந்து நிலையம் அருகே நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர்.இந்த நிலையில் கணவன்– மனைவி இருவரும் நீண்ட நேரத்திற்கு பின் கட்டுகளை அவிழ்த்து வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே வந் துள்ளனர். இந்த கொள்ளை குறித்து பழனி தாலுகா காவல்நிலையத்தில் கார்த்திகேயன் புகார் செய்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஜெயச்சந்திரன் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார். தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப் பநாயும் வரவழைக்கப்பட்டது.கொள்ளையர்கள் குறித்து கண வன்–மனைவி இருவரும் கூறியதா வது:-–கொள்ளையர்கள் 7 பேருக்கும் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும். அவர் கள் அதிகமாக எதுவும் பேசவில்லை. சைகையினாலேயே ஒருவருக்கொரு வர் பேசிக் கொண்டனர் என்றனர்.

கூடுதல் காவலர்கள் தேவை

பழனி நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் குறைவாகவே உள்ளனர். பொதுமக்கள் கூடுமிடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கண் காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் வாகனங்களை தீவிர சோ தனை செய்ய வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

gang loots 100 sovereigns jewels cash from financier s house

A masked seven-member gang robbed 100 sovereigns of gold jewels and Rs.35,000 from the house of a financier at Thalayam near here on Monday. The gang entered the farm house, tied the financier, Karthikeyan alias Appukuttan (44) and his wife Indirani, and looted the jewels and the cash at knife point.

Related posts