தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.சீதாராமன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஆர்,கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரானார். மறு உத்தரவு வரும்வரை, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரே முழு பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.…

Read More

மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவைகளை கலைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

Abolishing Empowered Group of Ministers by Modi. நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வரிசையில் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவைகளை கலைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 21 அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகளை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுவதற்கு முன், சில முக்கிய அமைச்சர்களைக் கொண்ட சிறு குழு ஒன்று அது பற்றி பரிசீலித்து பரிந்துரைகளை வழங்குவது முந்தய அரசின் வழக்கத்தில் இருந்தது. அமைச்சகங்களில் முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும், அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கவும் இது வழிவகுக்கும் என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்கள் குழுக்கள்…

Read More

பள்ளி பாடப்புத்தகங்களில் என் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக்கூடாது – பிரதமர் நரேந்திர மோடி

Chapter on Prime Minister Narendra Modi in school textbooks :  Prime Minister Narendra Modi has opposed the move of some BJP-ruled state governments to include a chapter on his life in school textbooks. பள்ளி பாடப்புத்தங்களில் பிரதமர் நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை சரித்திரத்தை சேர்ப்பதற்கு சில மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இதற்கு நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை போராட்டம்’ எனும் தலைப்பில் பள்ளிப்பாடபுத்தகங்களில் சேர்ப்பதற்கு குஜராத் மாநிலம், மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நரேந்திர மோடியின் இளமைக்காலம் முதல் அரசியல் பயணங்கள், மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்கள், வாழ்க்கையில் இவர் பிரதமந்திரி வரையில் சென்ற நிலை பற்றி பள்ளி பாடம் அமைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த…

Read More

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர்

Woman dies after being ‘pushed’ off train at Jalgoan மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பெண் பயணியை வலுக்கட்டாயமாக கிழே தள்ளியதில் காயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜலேகான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். ரயில் ஸ்டேசனை விட்டு நகர்ந்த பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண் சுதாரிப்பதற்குள் தடுமாறு கிழே விழுந்து விட்டார். கிழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்து…

Read More

குஜராத் மாநிலத்திலுள்ள 17 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Major fire in Surat commercial building குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பார்வத் பாட்டியா என்ற பகுதியில் உள்ள 17 மாடி வணிக வளாகக் கட்டடத்தில் இன்று காலை 9 மணியளவில் தீ பிடித்தது. இது சிறிது சிறிதாக மற்ற தளங்களுக்கும் பரவி பயங்கர தீ விபத்தாக மாறியது. டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடையின் குடோனாக இருந்த கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து தீ வேகமாகப் பரவியது. முதலில் கரும்புகை எழுந்து, பிறகு கட்டடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்தோ, காயம் குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை. Major fire…

Read More

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நீராவி குழாய் வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

one more dead steam pipeline explosion at nlc நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பயனளிக்காமல் சிவலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆம் தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் மூவருக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்‌ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். விபத்தை தொடர்ந்து, அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அங்கு பணிப்புரியும் ஊழியர்கள் கோரிக்கை…

Read More

மாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் பறந்து சென்ற பாதையை பற்றி புதிய தகவல்

Malaysia, Inmarsat release satellite raw data on missing MH370 மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வருகிறபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தை சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு…

Read More

காஷ்மீரில் இந்திய ராணுவ விமானம் விபத்து விமானி பலி

IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 வகை போர்விமானம் விழுந்து நொறுங்கியதில் அதன் பைலட் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானம் (மிக்-21) வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தெற்கு காஷ்மீரின் மதாமா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியபகுதியில் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், பைலட், ரகுபன்சி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால், விபத்து குறித்து தகவலறிந்து மீட்புபடையினர் வந்து பைலட்டை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead A MIG-21 fighter aircraft of the Indian Air Force…

Read More

ஒயிட் பிரிண்ட் என்ற பெயரில் பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை

Upasana Makati, the girl behind India’s first English lifestyle magazine in Braille வாசித்தல் ஒரு சுகமான அனுபவம். அந்த அனுபவத்தைச் சாத்தியமாக்க எண்ணிக்கையில் அடங்காத பத்திரிகைகள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் சுவாரசியமான எவ்வளவோ நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதை எல்லாம் நாம் வாசிக்க உதவும் வகையில் தருகின்றன பத்திரிகைகள். படிக்கத் தெரிந்தால் போதும் பரவசமூட்ட பல பத்திரிகைகளும், இதழ்களும் காத்திருக்கின்றன. ஆனால் இவை எல்லாமே பார்வையுள்ளவர்களுக்கானதாகவே உள்ளனவே, பார்வையற்றோருக்கும் பத்திரிகை வேண்டுமே என நினைத்தார் மும்பையைச் சேர்ந்த இளம்பெண் உபாஸனா மகதி. அவரது எண்ணத்தைச் செயல்படுத்தியால் உருவானதே ஒயிட் பிரிண்ட் என்னும் பத்திரிகை. இது முழுக்க முழுக்க பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட பத்திரிகை. இந்தியாவில் பிரெய்லி முறையில் வெளிவரும் முதல் ஆங்கிலப் பத்திரிகை இது. மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த்…

Read More

இந்தியாவில் அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் இந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிவிப்பு

Ambassador Production Stopped as Power Shifts in Delhi சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய மோரிஸ் ஆக்ஸ்போர்டு காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது. பின், அம்பாசிடர் கார், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, அதிகார வர்க்கத்தினர் பயணிக்கும், அதிகாரப்பூர்வ காராகவும் மாறியது. இந்துஸ்தான்…

Read More