பறக்கும் படையினர் முதல்வர் ஜெயலலிதா பயணித்த ஹெலிகாப்டரை அதிரடியாக சோதனையிட்டனர்

Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday.

Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday.

பொள்ளாச்சி பொதுக்கூட்டத்துக்கு வந்த முதல்வரின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடியாக நேற்று சோதனையிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்ய, பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள பல ஏக்கர் மைதானத்தில் பிரசார பொதுக்கூட்ட மேடையும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வந்தார். பின்பு விழா மேடைக்கு காரில் சென்றார். தொடர்ந்து, பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ், தேர்தல் பறக்கும்படை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், முதல்வர் வந்த ஹெலிகாப்டரை அதிரடியாக சோதனையிட்டனர். 10 நிமிடம் நீடித்த சோதனையில், தேர்தல் விதிமீறி எப்பொருளும் ஹெலிகாப்டரில் இல்லை. இதுகுறித்து பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ் கூறுகையில், ‘‘ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சிகளின் வாகனங்களையும் சோதனையிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் சோதனையிடப்பட்டது. எந்த பொருளும் சிக்கவில்லை‘‘ என்றார்.

Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday.

Related posts