மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னும் கட்சியின் தேசியத் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றுவேன்: ராஜ்நாத் சிங்

Rajnath Singh said that he will continue as president of BJP even after the success in the upcoming Lok Sabha election லக்னோ :- லக்னோ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க வில்லையென்றால் தலைமை பதவியில் நீடிப்பீர்களா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் திரு.ராஜ்நாத் சிங், “தங்கள் ஆட்சிக்கு வந்தாலும், தான் அந்த கட்சியின் தேசிய தலைவராகவே பணியாற்றுவேன்“ என தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற மக்களவை தேர்தலில் 272 க்கும் கூடுதலான இடங்களில் பா.ஜ.க. வெற்றியடைந்து நரேந்திர மோடி பிரதமராக ஆவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் டிக்கட் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ தமது கட்சியின் எல்லா முடிவுகளும் கட்சியினுடைய…

Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக டோனி விருப்பம்

MS Dhoni offers to give up CSK captaincy: Reports ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தம் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக டோணி முடிவு செய்து ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது வீரர்கள், அணி நிர்வாகிகள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த கமிட்டியின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனை பாதுகாக்கும் வகையில் வாக்குமூலம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ்…

Read More

தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார்

Tamil nadu State police department under election commission control தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார் சென்னை: சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் பிரவீண் குமார் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் டி.ஜி.பி., முதல் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தினுடைய ஆணைப்படி அதன் கட்டுப்பாட்டில் செயல்பட உள்துறை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளை தவிர்த்து ஏனைய கட்சிகள் எதுவும் சமூக இணையதளங்களில் பிரசாரம் செய்ய முன் அனுமதி கேட்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை, ருபாய் 13 கோடியே 16 லட்சம் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. சுமார் ருபாய் 6 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணியில் சுமார் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்…

Read More

இந்திய ராணுவ விமானம் சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விழுந்து நொறுங்கியது

IAF’s C-130J Super Hercules aircraft crashes; 5 crew dead மத்திய பிரதேசத்தில் குவாலியர் அருகில் மத்திய விமானப் படைக்குச் சொந்தமான C-130 J என்ற பிரமாண்ட விமானம் விழுந்து நொறுங்கியது. உத்தர்காந்த் வெள்ள மீட்பு, சமீபத்திய MH370 மலேஷியன் ஏர்லைன்ஸ் தேடுதல் வேட்டை ஆகியவற்றில் இந்த விமானமும் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ‘சூப்பர் ஹெர்குலஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த விமானத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டிருந்தது. விமானப்படை வீரர்கள் எத்தனை பேர் அதில் பயணம் செய்தார்கள் என்று இன்னமும் தெரிய வரவில்லை. ஆனால் குறைந்தது 4 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. ஆக்ராவிலிருந்து கிளம்பிய விமாணம் குவாலியரிலிருந்து 72 மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விமானம் மிகுந்த பாதுகாப்பானது என்று கூறப்பட்டது. வெளிச்சம் இல்லாத பகுதிகளிலும், மிகச் சிறிய ஓடு பாதைகளிலும் கூட இந்த விமானத்தை…

Read More

மார்ச் 24 சர்வதேச காச நோய் நாள்

Today is World TB Day அனைத்துலக காச நோய் நாள் மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.   மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும்அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய்…

Read More

இன்று ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்

Today G.D.Naidu birthday மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று..!! தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் உருவாக்கினார். ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா, அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக…

Read More

மார்ச் 23 உலக வானிலை தினம்

World Meteorological Day வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், உணவு, விவசாயம், பாதுகாப்பான தண்ணீர்,வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது. வானிலை மாறுபடுவதால்…: தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது. காத்திருக்கும் அபாயம்: வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.…

Read More

மாயமாகி போன மலேசிய விமான தேடுதல் வேட்டை: உலக நாடுகளின் கடுமையான போராட்டம்

ஆஸ்திரேலியா :- சிட்னி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகரமான  பெய்ஜிங்குக்கு 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமாகி போனது . கடந்த 8 நாட்களுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து , மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, வியட்நாம்  உட்பட 26 நாடுகள் தேடிவருகின்றன. எனினும் எந்த வித தகவலும் நேற்றுவரை கிடைக்கபெறவில்லை காணாமல் போன் விமானத்தை  இந்திய பெருங்கடலின் 2 பகுதிகளில் தேடப்பட்டு வருகிறது . முதல் பகுதி வடக்கு தாய்லாந்து முதல்  கஜகஸ்தான் எல்லை வரையிலும்,  2-வது பகுதி இந்தோனேஷியாவில் இருந்து தெற்கு இந்திய பெருங்கடல் வரை தேடப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய ராடாரில்  இந்திய பெருங்கடல் பகுதியில்  இரண்டு பொருடகள் காணப்படுவதாகவும், இந்நிலையில்  மாயமான…

Read More

மார்ச்-21 உலக வன தினம்

 World Forestry Day – 21st March பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.   மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக்…

Read More

மார்ச் 20 ஆம் தேதி உலகெங்கும் சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது

World House Sparrow Day – March 20 அழிவின் விளிம்பில் இருந்து வரும் சிட்டுக்குருவிகன் இனத்தை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மார்ச் 20 ஆம் தேதி உலகெங்கும் சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. குருவிகளின் அழிவிற்கு தானிய உணவு பற்றாக்குறை மற்றும் பயிர்களை காப்பாற்ற பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணமாகும்.இன்று வீடு கட்டுவதற்காக வயல் வெளிகள், வனங்களை அழித்து விட்டோம். இதனால் குருவிகள் கூடு கட்ட இடமின்றி போய் விட்டது. உலகம் முழுவதும் வெப்ப மண்டலமாக மாறியதாலும், செல்போன் டவர்களில் எழும் கதிர்வீச்சாலும் குருவிகளுடன் சேர்த்து, 226 பறவையினங்களும் அழிந்து வருவதாக…

Read More