பிப்ரவரி 28 இந்திய தேசிய அறிவியல் தினம்

National Science Day observed across India on 28 February தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க்து/அநேகமாக. தேசத் தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி…

Read More

நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் மூட நம்பிக்கையால் தன் குழந்தையின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்தே கொன்றற்

Nigerian dad ‘Locked Son’s Mouth With Padlock Because he Wouldn’t Stop Screaming Then Beat him to Death’ நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவரது மகனை பேய் பிடித்துவிட்டதாக கருதி மூட நம்பிக்கையால் குழந்தையின் வாயை பூட்டி அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நைஜீரியாவை சேர்ந்தவர் க்றிஸ் எல்விஸ். இவருக்கு வயது 30. சமீபத்தில் இவருக்கு குடும்பத்தில் சில துயர சம்பவங்கள் நடைபெற்றது. இதற்கு தனது குழந்தைக்கு பேய் பிடித்தது தான் காரணமென எண்ணிய எல்விஸ் குழந்தையின் வாயை பூட்டி, அடிக்க துவங்கினார். மேலும், குழந்தையின் உடல் முழுவதும் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்து ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு பூட்டி வைத்துள்ளார். வெளியே சென்ற சிறுவனின் தாய் வீடு திரும்பிய போது சிறுவனை காணாததால் பதற்றம் அடைந்து, எல்விசிடம்…

Read More

காணமல் போன டிசிஎஸ் பெண் ஊழியர் ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டர்

TCS woman techie found dead near Chennai சென்னை அருகே, டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்த சேலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவரைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸிலும் புகார் தரப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறுசேரி ஐடி பூங்காவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அருகிலேயே அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் உமா மகேஸ்வரி. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேடவாகத்தில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.  கடந்த 13ஆம் தேதி பணிக்கு சென்ற உமா மகேஸ்வரி அன்று மாலை அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால்…

Read More

நாட்டிலேயே வரதட்சனை கொடுமையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது

Andhra Pradesh tops list in dowry cases in 2012 நாட்டிலேயே வரதட்சணை கொடுமையில் ஆந்திரா மாநிலம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதில் எந்த மாநிலம்தான் முன்னணியில் இருக்கிறது என்று ஒரு தேசியகுற்றப்பதிவு ஆணைய தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 511 வரதட்சணை கொடுமை வழக்குகள் ஆந்திராவில் பதிவாகி உள்ளன. ஆயிரத்து 487 வழக்குகளுடன் ஒடிசா மாநிலம் இரண்டாவது இடத்தைபிடித்துள்ளது. மேலும் பெண்கள் மீதான பிற வன்முறை தாக்குதலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரத்து 536-வழக்குகளும், தமிழ் நாட்டில் மூன்றாயிரத்து 838 வழக்குகளும் பதிவாகி யுள்ளதாக தேசியகுற்றப்பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது. அருணாசலபிரதேசம் , இமாச்சலபிரதேசம், மணிப்பூர் , மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் வரதட்சணை கொடுமை…

Read More

பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம்

Today is International Mother Language Day உலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. இந்நிலையில் உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.இன்றைய உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். மாதம் ஒரு…

Read More

இந்தியாவில் 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது

McKinsey pegs poverty line at Rs 1,336 per month இந்தியாவின் மக்கள் தொகையான 1.1 பில்லியனில் 55 சதவீதம் பேர்- அதாவது 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுவந்த நிலையில் நாட்டில் சுமார் 68 கோடி மக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் எடுக்கப் பட்ட மற்றொரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.  பாதுகாப்பு,கல்வி, சுகாதாரம், தண்ணீர், வீடு, எரிபொருள், மற்றும் சமூகபாதுகாப்பு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவற்றில் குறைந்த பட்ச தேவையை பூர்த்தி செய்வது அடிப்படை வசதிகளாக கருதப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பூர்த்தி செய்வதற்காக தனிநபர் பொருளாதார மதிப்பீடு மூலம் புதிய வரி உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட விதிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு தனி மனிதனின் மாத தேவைக்கு சராசரியாக…

Read More

இறந்து போன சிசுவை 44 ஆண்டுகளாக கருப்பையில் சுமந்து கொண்டிருக்கும் 84 வயது மூதாட்டி

Doctors find 44 year old fetus inside 84 year old woman பிரேசில் நாட்டை சேர்ந்த 84 வயது பெண்ணுக்கு பல ஆண்டாக வயிற்று வலி ஏற்பட்டு தொல்லை கொடுத்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டார். இந்த வலியானது அவரது 40-வது வயது பிரசவ காலத்தில் இருந்தே தொடர்கதையாக இருந்தது. சமீபத்தில் மருத்துவமனையில் அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்த போது கருப்பைக்கு வெளியே சிசு உருவாகி உயிரற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிசுவுக்கு 20-28 வாரம் இருக்கலாம். கை-கால், முதுகெலும்பு, விலா எலும்பு ஆகியவை உருவாகி இருக்கிறது. இதுபற்றி டாக்டர் கூறுகையில், ‘இதுபோல சில பெண்களுக்கு கருப்பைக்கு வெளியே சிசு உண்டாவதுண்டு.  இந்த மூதாட்டியின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு சுமார் 44 ஆண்டுக்கு முன்பு உருவானது. அது இறந்து விட்டதால் அதை…

Read More

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Seven Rajiv Gandhi killers, including Nalini Sriharan, to be freed, decides Tamil Nadu government   சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில்தான் இம்மூவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர்…

Read More

இங்கிலாந்தில் தாடி மீசை வளர்கும் 23 வயது பெண்

Teaching Assistant who Suffered Taunts Because of her Excessive Hair Decides to Stop Trimming it After Being Baptised a Sikh இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மீசை, தாடி அதிக அளவில் வளர்ந்து வருவதால், அவர் இனி மீசை, தாடியுடனேயே வாழ்வது என்று முடிவெடுத்துள்ளார்.  இங்கிலாந்தில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு போன்ற பகுதிகளில் முடி வளர்ந்து, அவருடைய உண்மையான அடையத்தை மாற்றியுள்ளது. ஹர்னாம் கவுர் என்னும் இந்தப் பெண்ணுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற நோய் அவருடைய 11 வயதில் தாக்கி முகத்தில் முடி வளர ஆரம்பித்துள்ளது.  அதனால் இவர் பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். இதனால் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால்,…

Read More

பாகிஸ்தானில் திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபனின் கொடூரம்

Pakistani man chops off girl’s nose for refusing to marry him பாகிஸ்தானில் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை வாலிபர் ஒருவர் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான செயல் குறித்து போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். லாகூருக்கு அருகிலுள்ள பகவல்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் பஷீர் அஹமது. அதே கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நதீம் என்ற வாலிபர் பஷீரின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த நதீம், அவருடைய தந்தை மற்றும் கூட்டாளிகளுடன் பஷீரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளை சித்ரவதை செய்துள்ளார். பின்பு…

Read More