சென்னையில் ஐஸ் வியாபாரியின் காதை கடித்து துப்பிய ஆட்டொ ஒட்டுனர்

Man bites off vendor’s ear

Man bites off vendor’s ear

குல்பி ஐஸ்சில் பாதாம் இல்லை எனக் கூறி ஐஸ் வியாபாரியின் காதைக் கடித்துத் துப்பியிருக்கிறார் போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐஸ் வியாபாரி பீமலேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அயனாவரத்தில் குல்பி விற்றுள்ளார். அப்போது போர்சியஸ் சாலை அருகே, போதை ஆசாமி ஒருவர் பீமலேஷிடம் ஐஸ் வாங்கியுள்ளார். குல்பியை சாப்பிட ஆரம்பித்த போதை ஆசாமி, குல்பியில் பாதாம் இல்லை என தகராறு செய்துள்ளார். மேலும், பாதாம் இல்லாத குல்பிக்கு பணம் கொடுக்க முடியாது என மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த போதை வாலிபர் திடீரென பீமலேஷின் வலது காதை கடித்து துப்பிவிட்டு ஓட்டம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பீமலேஷ் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்த தினேஷ் (25) என்ற ஆட்டோ டிரை வரை கைது செய்துள்ளனர். பீமலேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Man bites off vendor’s ear

Police have arrested an autorickshaw driver for biting off the ear lobe of an 18-year-old ice cream vendor during a brawl in Ayanavaram on Friday.   Police said auto driver G Dinesh, 25, of Narayana Street in Ayanavaram, was drunk when he picked up a quarrel with icecream vendor R Vimalesh of Peravallur in north Chennai. Dinesh was walking home along Konnur High Road with two friends when he intercepted Vimalesh and asked him to give 20 worth kulfi for 10. Vimalesh refused and a fight ensued.   As the two wrestled, Dinesh bit off a portion of Vimalesh’s ear lobe and spat it out. Passersby nabbed Dinesh and handed him over to police. Vimalesh was sent to the Kilpauk Medical College and Hospital and later to the Stanley Medical College and Hospital. Dinesh was remanded in judicial custody.

Related posts