இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பில் கேமரூன் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமையன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்த சுதந்திரமான மற்றும் நம்பத்தகுந்த விசாரணை உள்பட அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் நாங்கள் வெளிப்படையாகப் பேசினோம்.

விசாரணை நடத்த கெடு: அப்போது நான், அதிபர் ராஜபட்சவிடம், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து, மார்ச் மாதத்திற்குள் நம்பத்தகுந்த, பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகக் கூறினேன்.

அப்படி நடைபெறவில்லை என்றால், இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தும்படி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை எங்கள் நாடு அணுகும் என்றும், அதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்றும் அவரிடம் (ராஜபட்சவிடம்) தெரிவித்தேன். போரினால் வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்த தமிழர்களை அவர்களின் பகுதியில் மறுகுடியமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

கால அவகாசம் ஏன்?: போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தற்போதுதான் இலங்கை மீண்டு வருவதாகவும், எனவே சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் என்னிடம் அதிபர் ராஜபட்ச கேட்டுக் கொண்டார். நானும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டேன்.

போர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் என்ன நடைபெற்றது என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேச விசாரணைக்கு நான் வலியுறுத்த நேரிடும் என்று தெரிவித்தேன். வட அயர்லாந்தில் செயல்படும் தீவிரவாதிகளால் பிரிட்டன் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருப்பதையும், அங்கு பிரிட்டன் அரசு எவ்வாறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதையும் நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

ராஜபட்ச ஏற்கவில்லை: பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் வெளிப்படையாக பேசினோம். ஆனால் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைக்க கிடைத்த வாய்ப்பாக இதனை கருதும்படி நான் அவரிடம் தெரிவித்தேன்.

காமன்வெல்த் மாநாட்டிற்கு சில நாடுகளின் தலைவர்கள் (இந்தியா, கனடா, மோரிஷியஸ் பிரதமர்கள்) வராதது குறித்தும், நான் வந்ததும் குறித்தும் என்னிடம் நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) கேட்கிறீர்கள். நான் இங்கு வந்ததால்தான், எனது கருத்துக்களை வலியுறுத்த முடிந்தது.

இலங்கையில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் தேவைப்படுகிறது. பத்திரிகைகளை சுதந்திரமாக செயல்பட இலங்கை அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.

வடக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுடனான எனது சந்திப்பு நல்ல முறையில் அமைந்திருந்தது. இந்த சந்திப்பின்போது, வடக்கு மாகாண மக்களின் நலன்களுக்காக அவருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறினேன். யாழ்ப்பாணத்திற்கு நான் சென்றதன் நோக்கம், உலகத்தின் ஆதரவை அப்பகுதி மக்களுக்கு தெரிவிப்பதே ஆகும்.

விடுதலைப் புலிகள்: பயங்கரமான மற்றும் அச்சமூட்டும் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாவதை யாரும் விரும்பவில்லை.

யாழ்ப்பாணத்தில் என்னை சந்தித்து குறைகளை தெரிவித்தவர்களுக்கு எதிராக பழிவாங்கும் செயலில் இலங்கை அரசு ஈடுபடாது என்று கருதுகிறேன். ஏனெனில் அடுத்து அவர்கள் (இலங்கை அரசு) என்ன செய்யப் போகிறார்கள் என்பதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார் கேமரூன்.

இலங்கை நிராகரிப்பு

பிரிட்டன் பிரதமர் கேமரூனின் வேண்டுகோளை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்து விட்டது. கேமரூனின் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே இலங்கை அமைச்சர்கள் ஹிமல் ஸ்ரீபலா டி சில்வா, கெகலியெ ரம்புகவெல்லி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:

காமன்வெல்த் அமைப்பு என்பது, சர்வதேச போலீஸ் அமைப்பு கிடையாது. விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் வலியுறுத்தலை நிராகரிக்கிறோம். எந்த நாடும் தங்களது முடிவை எங்கள் நாட்டின் மீது திணிக்க முடியாது.

எங்கள் நாட்டின் மீது படிந்திருந்த ஏகாதிபத்திய நிழலை (பிரிட்டனின் காலனியாதிக்கம்) முழுவதுமாக அகற்றி விட்டோம். மீண்டும் எங்கள் நாட்டின் மீது அந்த நிழலை படிய விட மாட்டோம். இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நிராகரிக்கிறோம். இதுகுறித்து எங்கள் நாடு ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்து விட்டது. இதுதொடர்பாக சில குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்திருக்கிறது. வட அயர்லாந்து புனரமைப்பு பற்றி பேசத் தேவையில்லை. ஏனெனில், வட அயர்லாந்தை பிரிட்டன் ஏமாற்றி விட்டது என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

ராஜபட்ச நிராகரிப்பு

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் வலியுறுத்தலை இலங்கை அதிபர் ராஜபட்ச நிராகரித்து விட்டார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், இலங்கை அரசுக்கு தனது சொந்த விசாரணையின்மீது நம்பிக்கை இருப்பதாகவும், விசாரணையை நடத்தி முடிப்பதற்கு இலங்கைக்கு சிறிது கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் நிர்பந்தம் செய்வதால் எதுவும் நடைபெற்று விடாதென்றும், வலியுறுத்துவது அல்லது உத்தரவிடுவதை விட்டுவிட்டு, காத்திருப்பதுதான் சிறந்தது என்றும் ராஜபட்ச கூறினார். மேலும், கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது கற்களை வீசக் கூடாதென்றும் டேவிட் கேமரூனை ராஜபட்ச மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

இதேபோன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர்கள் ஹிமல் ஸ்ரீபால டி சில்வா, கெகலியெ ரம்புகவெல்லி,

டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் கருத்தை நிராகரித்தனர். எந்தவொரு நாடும் தங்களது முடிவை இலங்கையின் மீது திணிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues

524687868_213232632-300x186

15_tamils_sl_g_w_MED

487505-131116-david-cameron

article-2507838-196E1E6E00000578-929_634x472

david-cameron-360

lankan_big

வீடியோ இணைப்பு :

David camron Speech :

Raja pakse Speech :

 

 

Britain has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues, failing which an international independent investigation will be inevitable.

British Prime Minister David Cameron, speaking to reporters at the BMICH on the sidelines of the Commonwealth summit today, said that he hopes Sri Lanka will make more progress by the time the UN Human Rights Council meets in Geneva next March.

Cameron noted that there was progress on the ground and appreciated the work carried out by the Sri Lankan government.

The British Premier had visited the North yesterday and later had talks with President Mahinda Rajapaksa.

“In coming to Colombo I pledged to shine the international spotlight on Sri Lanka and that is what I have done,” he said.

He also said he was optimistic about the potential for Sri Lanka following the end of the 30 year conflict. The Premier stressed that no one wants to return to the days of the LTTE and relive the “brutal things” they did.

“The message I have is that this issue is not going to go away. This is an issue now of international concern and it’s an issue which won’t go away. We should pursue it very vigorously,” he said.

He also noted that it is important that people in Sri Lanka are given the freedom to speak freely and speak to journalists as the world will be watching.

The Premier also agreed that after 3 decades of war Sri Lanka will need time to recover. He said Britain will increase its aid to Sri Lanka to help in the recovery efforts.

The media briefing hosted by the British Prime Minister ended in controversy with some local journalists screaming out as he walked away, slamming him for not accommodating more questions from the local media.\

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues

Related posts