மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு மரியாதை

Tamil language Patriot Marshal Nesamony : floral tributes paid to the statue of Tamil language Patriot Marshal Nesamony (so called Kumari Thanthai) at Nagercoil on November 1, the day of merger of Kanyakumari district with state of Tamil Nadu., by the district collector on behalf of State government, as a special mark of respect to the late leader.

floral tributes paid to the statue of Tamil language Patriot Marshal Nesamony (so called Kumari Thanthai) at Nagercoil on November 1, the day of merger of Kanyakumari district with state of Tamil Nadu., by the district collector on behalf of State government, as a special mark of respect to the late leader.

கன்னியாகுமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுக்கு பின் தமிழக அரசு சார்பில் முதல் விழா வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. குமரி தந்தை என்று அழைக்கப்படும் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி உருவச் சிலைக்கு கலெக்டர் திரு.எஸ். நாகராஜன் மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததும் குமரி விடுதலை போராட்டம் துவங்கியது. சுமார் 9 ஆண்டு போராட்டத்துக்கும் உயிர் தியாகத்துக்கு  பின் தமிழ்நாட்டோடு கன்னியாகுமரி இணைக்கப்பட்டது.

தமிழகத்தின் பூர்விகமான திருவிதாங்கூரில் பீருமேடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், நெய்யாற்றின்கரை, விளவங்கோடு, செங்கோட்டை, தேவிக்குளம், ஆகிய பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டு காலமாக தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். எனினும் சில நூறு ஆண்டுகளாக, கேரளா மாநில முதலாளிகளால், இந்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

தமிழ் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி அவர்கள் தலைமையில் பல தலைவர்கள் நடத்திய போராட்டத்தில், 36 தமிழர்கள் உயிர் தியாகம் செய்த பின், 1956 நவம்பர் 1 அன்று விளவங்கோடு, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம், ஆகிய நான்கு தாலுகா பகுதிகளும், செங்கோட்டையில் சரி பாதியும் என்று மொத்தம் நான்கரை தாலுகா பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்தன.

இப்படி உருவான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெள்ளிகிழமை 58-வது ஆண்டு விழாவாகும். இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பாக விழா கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆகையால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த தினமான நவம்பர் 1-ம் தேதியன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையதின் முன் அமைந்திருக்கும் தியாகி.மார்ஷல் நேசமணியின் உருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் திரு.எஸ். நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நாஞ்சில் திரு.ஏ. முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ். சாரதாமணி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு இணையத் தலைவர் டி.ஜான்தங்கம், கிழக்கு மாவட்டச் செயலர் சிவ செல்வராஜன், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் முகமது இஸ்மாயில், ராஜன், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ஏ. அசோகன், மொழிப்போர் தியாகி குமாரசாமி, மார்ஷல் நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்பலோஸ் ஆகியோர் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tamil language Patriot Marshal Nesamony : floral tributes paid to the statue of Tamil language Patriot Marshal Nesamony (so called Kumari Thanthai) at Nagercoil on November 1, the day of merger of Kanyakumari district with state of Tamil Nadu., by the district collector on behalf of State government, as a special mark of respect to the late leader.

Related posts