அக்டோபர் 31-ம் தேதி உலக சேமிப்பு நாள்

World savings day 31st October every year – World Savings Day is celebrated on October 31, 2013.

World savings day 31st October every year - World Savings Day is celebrated on October 31, 2013. 

அக்டோபர் 31 உலக சிக்கன தினம்

உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில்  முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில்  சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார  உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், சிக்கனதினுடைய முக்கியத்துவத்தை இந்த உலகிற்கு உணர்த்த எண்ணி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் முக்கியமான நடைமுறை என்னவென்றால், விடுமுறை நாட்களில் வரும் அக்டோபர் மாத 31-ம் தேதியன்று அனைத்து வங்கிகளும் திறந்து வைக்க பட வேண்டும். பொது மக்கள் அன்று தங்களது சேமிப்பு கணக்கில் அன்றைய தினம், தங்களிடம் உள்ள பணத்தை டெபொசிட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த சிறப்பு தினம் அனுசரிக்கபடுகிறது.

உலக சேமிப்பு நாள் அக்டோபர் 31, 2013 இன்று கொண்டாடப்படுகிறது.

பொதுவாக தற்பொழுது நிகழ்ந்து வரும் பொருளாதார மாற்றத்தில் பலர் தங்களது வங்கி சேமிப்பு கணக்கை, தங்களுக்கு இது போன்ற ஒரு கணக்கு இருக்கிறது என்று கணக்கு காட்டவே வைத்துள்ளனர். நடைமுறையில் தங்களது பணத்தை பெரும்பாலும் இதில் போடுவதில்லை. கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கி அதில் பணம் திருப்பி செலுத்தவே சரியாக இருப்பதால் இதற்கு போதிய அளவு பணம் கிடைப்பதில்லை. உபரியாக கிடக்கும் பணத்தை கூட இந்த மாதம் கையில் வைத்துக்கொண்டு, கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து விட்டு அடுத்த மாதம் அந்த பணத்தை கட்டி கணக்கை நேர் செய்வதிலேயே காலம் ஒடி விடுகிறது. இது போன்ற தருணங்களில் சேமிப்பு பற்றி தனிமனித விழிப்புணர்வை ஏற்படுத்தி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்த சேமிப்பு தினம் அனுஷ்டிக்கபடுகிறது.

World Savings Day

World savings day 31st October every year - World Savings Day is celebrated on October 31, 2013.

World savings day 31st October every year – World Savings Day is celebrated on October 31, 2013.

on October 31st day of the year 1924, The World Savings Day was established. In the 1-st International Savings Bank Congress which is organised by World Society of Savings Banks held at Milano, Italy. The official Representatives of 29 nations participated and the motive of this is to bring in savings habit into the mind of worldwide public and give an awareness of its relevance to the economy to every individual.

Related posts