பிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலி

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu

மணிலா:- பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் சுமார் 95 பேர் பலியானார்கள். அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின.  பிலிப்பைன்சில் சுற்றுலா மையமான சிபு மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. அதனால் பீதியும் பதட்டமும் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச்சென்று தஞ்சம் அடைந்தனர்.

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu

இந்நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடுமையான சேதம் அடைந்துள்ளது. வீடுகள் மற்றும் ஏனைய  கட்டிடங்கள் யாவும் அதிர்ந்து சரிந்து  விழுந்ததில் 12 பேர் பலியானார்கள். இந்த நில அதிர்வினால் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முன்னாள் சிட்டிஹால் உள்பட பல்வேறு புராதன சின்னங்கள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்தது. சிபு அருகே அமைந்துள்ள மீன் பிடி துறைமுகம் முழுவதும் சேதமானது. மாண்டேவு எனும் இடத்தில் மார்க்கெட்டின் கூரை சரிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதில் சுமார்19 பேர் படுகாயம் அடைந்தார்கள். மீட்பு பணி குழுவினர் வேகமாக போய் இடிபாடுகள் எல்லாவற்றையும் உடனடியாக அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu

இங்கே  நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 என பதிவாகிஇருக்கிறது. போகோல் எனும் தீவில் காமன்வெல்த் நகரினில் பூமிக்கு அடியினில் சுமார் 56 கி.மீ. ஆழத்தில் இது பதிவாகியுள்ளது.

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu, About 95 people have been reported dead after a magnitude 7.2 earthquake hit the central Philippines.

Related posts