அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்டு: புதிய காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி

Anganwadi staff suspended by Kanchipuram collector K. Baskaran for not being present during the duty timing

காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் அருகில் பணிக்கு வராமல் இருந்த அங்கன்வாடி பணியாளரை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Anganwadi staff suspended by Kanchipuram collector K. Baskaran for not being present during the duty timing
காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன்

காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சூணாம்பேடு அரசு ஆதிதிராவிடர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கே தங்கியுள்ள மாணவர்கள் பற்றியும், இரவு நேரத்தில் எத்தனை மாணவர்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றியும் விடுதி காப்பாளரிடம் விசாரித்தார். மேலும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தரப்படும் உணவு பற்றியும் மேலும் உணவு பொருட்களான பருப்பு ,அரசி, காய்கறிகளின் தரம் பற்றியும் அவர் விசாரணை செய்தார்.

பின்னர், சூணாம்பேடு ரேஷன்கடைக்கு போய், அங்கே பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் எடை எந்திரத்தின் செயல்பாடு,  அத்தியாவசிய பொருட்களின் இருப்பு ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர், அங்கே இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு இருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து விட்டு அவர்களுக்கு அங்குள்ள மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கிரர்களா என கேட்டு தெளிவடைந்தார். தேவையான அளவு  மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் மருத்துவ அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்டு: சூணாம்பேடை அடுத்து இருக்கும் பழவூர் கிராமத்துக்கு போன கலெக்டர் அங்கே இருக்கும் சத்துணவு மையத்தை கண்காணித்தார். மேலும் அங்கே சமையல் செய்து தயாராக இருந்த சாதம் மற்றும் சாம்பார் ஆகிவற்றை சாப்பிட்டு ருசி பார்த்தார். அங்கே உள்ள சத்துணவு மையத்தை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தினார். தரம் வாய்ந்த உணவுபொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகளில் மட்டுமே சமையல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர் அதைத்தொடர்ந்து அருகே இருந்த அங்கன்வாடி மையத்துக்கு போனார். அங்கே, அங்கன்வாடி ஊழியர் ஆர். ரேவதி பணிக்கு வராமல் இருந்தது அறிந்துகொண்டு, இது பற்றி விசாரணை மேற்கொண்ட கலெக்டர் அவரை உடனடியாக சஸ்பெண்டு செய்ய உத்தரவு பிறபித்தார்.

Anganwadi staff suspended by Kanchipuram collector due to absence for the duty

Related posts