கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீசி தாக்குதல்

stone pelting on Kerala Chief Minister Oomen Chandy in kannur , he suffered minor injuries

கண்ணூர் :- கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு காவல்துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் கண்ணூர் சென்றார். அங்கே அவர் வர  எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது போராட்டகாரர்களில் சிலர் திடீரென அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.stone pelting on Kerala Chief Minister Oomen Chandy in kannur , he suffered minor injuries

காரில் அவர் வந்த போது எல்லா புறமும் போராட்டக்காரர்கள் அவரது காரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் காரினுடைய பின் கண்ணாடிகள் உடைந்தது. அப்பொழுது உடைந்த கார் கண்ணாடியினுடய தூள் தெறித்து உம்மன் சாண்டியின் நெற்றியில் பட்டு காயம் உண்டானது. அவர் மேல் மேலும் ஒரு கல் அடியும் பட்டது.

இந்த கல் வீச்சு தாக்குதல் நடந்த போது மந்திரி கே.சி. ஜோசப்பும் அவருடன் இருந்தார். இந்த சம்பவத்தால் கலக்கம் ஏதும் அடையாத உம்மன் சாண்டி அந்த காவல்துறை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பின்னர் அடுத்தடுத்து அவருடைய நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதுவரை இந்த கல் வீச்சு தாக்குதல் சம்பந்தமாக காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை.

காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதனால் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடனே பதவி விட்டு இறங்க வேண்டும் என இடது சாரி ஜனநாயக முன்னனியினர்  அங்கே  போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

stone pelting on Kerala Chief Minister Oomen Chandy in kannur 

Related posts