மனித மூளைக்கு நிகரான கணினி: IBM நிறுவனம் சாதனை

 The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid

  The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid

மனித மூளையை போல் மின்னணு இரத்ததினால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை செய்துள்ளது.

மூளை தான் மனிதனுடைய உடல் உறுப்புகளில் மிக மிக முக்கியம். இது மனிதன் இயங்க மிகவும் இன்றியமையாததாகும்.

மூளையை போலவே மின்னணு இரத்ததினால் இயங்கக்கூடிய கணினி ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

அது என்னவென்றால், மனிதனுடைய மூளையை போல் கம்ப்யூட்டர் ஒருவகையான திரவத்தினால் சக்தியை பெற்று அதே திரவத்தினால் அதனுடைய வெப்பத்தை நீக்கி குளுமை ஏற்படுத்தி கொள்ளும்.

ஒரு குருதிச் சுற்றோட்டத்தொகுதி போல், ஒரு வித மின்னணு ரத்தத்தினை கம்ப்யூட்டர் உள் வழியாக செலுத்தி ஓடச் செய்து அதன் மூலம் அந்த கம்ப்யூட்டர்க்கான சக்தியினை அதனுள் கொண்டு போகும். மேலும் அதில் இருந்து வெப்பத்தை வெளியிலும் கொண்டுவரும்.

ஜெர்மனியில் இருக்கும் சூரிச் நகரில் இருக்கும் இந்த நிறுவனத்தினுடைய சோதனைக் சாலையில் இந்த முறையில் செயல் படும் கம்ப்யூட்டரின் செயல்முறை விளக்கம் ஒன்றை ஐ பி எம் விஞ்ஞானிகள் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் ஆகியவர்கள் வழங்கினார்கள்.

இவர்கள் கூறும் போது, தற்சமயம் கம்ப்யூட்டர்களில் 1% மட்டும் தான் தகவல்களை பெற உபயோகபடுவதாகவும், இம்முறை உபயோகபடுத்தப்பட்டால் சிறந்த கம்ப்யூட்டரை தங்களால் உருவாக்க இயலும் என தெரிவித்துள்ளனர்.

பின்னர், அதுமட்டுமின்றி 2060-ம் ஆண்டுவாக்கில் இந்த முயற்சி முழுமை பெற்று, தற்சமயம் ஓர் கால் பந்தாட்ட மைதான அளவிற்கு பெரிதாக இருக்ககூடிய கம்ப்யூட்டரை ஓர் மேஜையில் வைக்கும் அளவிற்கு சிறிய ஒன்றாக உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஓர் சூப்பர் கம்ப்யூட்டரை ஓர் கல்கண்டு அளவுக்குள் கொண்டுவருவது தங்களது நோக்கம் என்றும், இதற்கு மனித மூளையை போலவே கம்ப்யூட்டர் செயல்படும் முறையை கண்டுபிடித்தால் தான் சாத்தியமாகும் எனவும் கூறுகின்றனர்.

இன்றைய நிலையில் ஐ பி எம் நிறுவனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டராக இருப்பது வட்சன் எனும் கம்ப்யூட்டர் ஆகும்.

அமெரிக்க பொது அறிவுப் போட்டியில் இந்த கம்ப்யூட்டர் மனித மூளையை வென்று விட்டது.

எனினும் இது நியாயம் இல்லாதது என கூறும் விஞ்ஞானிகள், மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டும் உபயோகபடுத்தியது எனவும், கம்ப்யூட்டரோ 85,000 வாட்ஸ் சக்தியை உபயோகபடுத்தியது என்றும் கூறுகின்றனர்.

இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு இரத்தத்தால் இயங்கும் கம்ப்யூட்டர்கள் பதில் சொல்லும் என்று ஐ பி எம் நிறுவன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid

 The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid

A scientific machine that can accurately match the human brain is the Holy Grail of computer science. Now IBM claims that they are nearing this goal after the research done by scientists where a super computer uses  the electronic blood.

Related posts