நாகர்கோவிலில் 10 மாதங்களாக வீட்டில் சடலத்துடன் வாழ்ந்த குடும்பம்

Relatives live with woman’s body in house for 10 months

Relatives live with woman’s body in house for 10 months

நாகர்கோவிலில் இறந்து போன தங்களது குடும்பத்து பெண்ணினுடைய உடலை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து  அவரது குடும்பமே 10 மாதங்கள் வாழ்ந்து கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வாழ்ந்து வருபவர் மறைந்த சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி சரோஜினி(89).  இவருக்கு உமாதேவி என்ற மகளும், பெருமாள் பிள்ளை, செல்வம் பிள்ளை என்ற மகன்களும் உண்டு. மகள் உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இந்த தம்பதிக்கு சிவபிரசாத் (வயது 25) என்ற மகன் இருக்கிறார்.

குடும்ப தகராறில் உமாதேவி தனது கணவர் தாணுப்பிள்ளையை பிரிந்து, மகன் சிவபிரசாத்துடன் நாகர்கோவிலில் இருக்கும் ராமவர்மபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடியேறிவிட்டார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அவரது சகோதரர் பெருமாளும் இறந்து விட்டார். இதனையடுத்து சரோஜினியுடன், மகன் செல்வம் பிள்ளை, மகள் உமாதேவி மற்றும் பேரன் சிவபிரசாத் ஆகியோர் வசித்து வந்தார்கள். செல்வம் பிள்ளை திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியன்று, உடல் நலம்  சரியில்லாமல் உமாதேவி இறந்திருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது உடலை அடக்கம் செய்யாமல் துணி ஒன்றில் சுருட்டி நன்றாக கட்டி விட்டில் உள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி விட்டார்கள்.

சரோஜினியின் வீடு 10 அறைகள் கொண்ட பழைய அரண்மனை போன்ற ஒரு வீடாகும். பெரிய வீடு என்பதால் கோட்டை சுவர் மறைத்து இந்த குடும்பத்தினருடன் அக்கம் பக்கத்தினர் யாரும் எந்தவித தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. இவர்கள் எப்பொழுதும் வெளிமனிதர்களுடன் ஒட்டாமல் கதவை பூட்டி வைத்துக்கொண்டு உள்ளே இருப்பார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் செல்வம்பிள்ளை தனக்கு செலவுக்கு பணம் ஏதும் கிடைக்குமா என்று அருகில் வசிக்கும் சாந்தியின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். இதைதொடர்ந்து சாந்தியின் மகன் ரூ.500 கொடுத்துள்ளார். பின்னர் சாந்தி அவருடன் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது மிகுந்த துர்நாற்றம் வீசி இருக்கிறது. அங்கிருந்த ஒரு அறைகுள் இருந்து தான் துர்நாற்றம் அதிகமாக வருகிறது என தெரிந்ததும்,அந்த அறையை சாந்தி உள்ளே சென்று பார்த்திருக்கிறார். இதை அவர் பார்த்ததும், வீட்டில் உள்ள அனைவரது நடவடிக்கையும் மாறியது.

பதற்றமாக வெளியில் ஓடி வந்த சாந்தி இது பற்றி காவல்துறைக்கு தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல் துறையினர் சந்தேகத்துக்கு உட்பட்ட அந்த அறையை திறந்து பார்த்தனர். அந்த அறையின் உள்ளே பிணம் துணியில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதை வெளியில் எடுத்து வந்து பிரித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்கள். இறந்த உமாதேவியின் சடலம் அழுகி இறுகிய நிலையில் இருந்தது. பின்னர் உடனே அந்த சடலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இது பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஏதோ ஒரு உருவத்தை பார்த்து பலியாகிவிட்டாள். மேற்கொண்டு எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள் என கூறியிருக்கின்றனர். காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியும் எந்த தகவலையும் அவர்களிடம் இருந்து பெற முடிய வில்லை. கடந்த 10 மாதங்களாக அந்த பெண்ணின் உடலை வீட்டுக்குள் வைத்து கொண்டு இவர்கள் வாழ்ந்து இருப்பது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அந்த பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வீட்டுக்கு அருகில் யாரும் போகததால் எவருக்கும் துர்நாற்றம் தெரியவில்லை மற்றும் இவர்கள் அங்கேயே இருப்பதால் அந்த தூர்நாற்றம் பழகி போய் இவர்களுக்கும் தெரியவில்லை. இந்த விசித்திர சம்பவமானது நாகர்கோவிலில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Relatives live with woman’s body in house for 10 months

Relatives live with woman’s body in house for 10 months

Three persons of a family were  found in Kanyakumari district capital nagarkoil keeping the body of their relative. They were keeping the dead body of a 56-year-old woman, who had died 10 months ago in their house, in Ramavarmapuram near Chettikulam junction in the town.

Uma Devi,was separated from her husband few years back. She was living with her mother Sarojini Devi (aged 89 years) brother Chellam Pillai (53) and her son Sivaram (25) came to light on Friday when Chellam Pillai, who went to get some help from her neighbour Shanthi told about the death of her sister. When Shanthi went inside Chellam Pillai’s house, she found the decomposed body of Uma Devi covered with a cloth lying inside the house and informed police. Kottar police rushed to the spot and held an enquiry. Based on Chellam Pillai’s statement, Uma Devi had died on 3rd December 2012, said police, adding that Chellam Pillai was a BTech graduate and Sivaram was a BE graduate. All the three in the house seem to be mentally disturbed and they did not talk with anyone else. They were taken to a government hospital at Aasaripallam in Kanyakumari for treatment. “As the body was highly decomposed, it could not be taken for postmortem. We plan to conduct autopsy at the house itself on Saturday”, police said.

Related posts