தூத்துக்குடியில் பதுக்கிய தாது மணலை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி

tuticorin harbour to be protested by three district fisher men to stop smuggling of soil containing rare minerals from tamilnadu.

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இருந்து தாதுமணலை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிகையை முன்வைத்து தூத்துக்குடி துறைமுகத்தை முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் திடிரென முற்றுகையிட வேண்டும் என மூன்று மாவட்டதை சார்ந்த மீனவர்கள் தீர்மானித்துதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tuticorin harbour to be protested by three district fisher men to stop smuggling of soil containing rare minerals from tamilnadu.

இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு  மற்றும் தூத்துக்குடி மீனவர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக அதனுடைய நிர்வாகிகள் சுபாஷ் பர்னாண்டோ, சேவியர்வாஸ், ஜாய்காஸ்ட்ரோ, ஸ்டீபன் ஆகியோர் சில தகவல்களை அளித்துள்ளனர். அவர்கள் கூறியது பின்வருமாறு: தமிழக அரசு தாது மணல் மீது விதிக்க பட்டிருந்த போதிலும், சிறப்பு அனுமதியுடன் தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக  என்னும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தாது மணல் ஏற்றுமதிக்கும் திடீர் தடை ஏதேனும் விதிக்கப்படும் என்ற அச்சத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் எனும் தனியார் நிறுவனம், தூத்துக்குடி துறைமுகத்தில் தனது கப்பலை நிலை நிறுத்தி தாது மணலை ஏற்றி கொண்டு இருக்கிறது. இங்கு கார்னெட் மணலுக்கு மட்டும் முன் தேதியிட்டு அனுமதியை பெற்றுக் கொண்டு மோனோசைட் மற்றும் ரூட்டைல் ஆகிய மணல்களையும் சேர்த்து கடத்தி அனுப்பபடுகிறது. சுமார் 12,500 மெட்ரிக் டன் எடையை கொண்டுள்ள தாது மணல் நிரப்பட்ட சரக்கு கப்பல் வரும் திங்கள் கிழமை புறப்பட தயாராக உள்ளது. அடுத்தபடியாக மற்றொரு கப்பலை வரவழைத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் தாது மணலை கடத்தி அனுப்ப  முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆக,  வி.வி நிறுவனம், தன் பதுக்கிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் தாது மணலை அதிரடி தடை வருவதற்கு முன் வேகமாக வெளிநாட்டிற்கு அனுப்பும் வேலையே செய்து கொண்டு வருகிறது. இது முழுமையான கடத்தல் மேலும் இது தடுக்கப்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆகையால் இதை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் தமிழக அரசு விழித்து கொள்ளவண்டும். இதற்கு தூத்துக்குடி துறைமுகம் நிர்வாகம் உடந்தையாக  இருப்பதை மீனவர் ஐக்கிய முன்னணி கண்டிக்கிறது. இந்த கடத்தலை உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அடுத்து 2வது தளத்தில் தாது மணல் கடத்த இருக்கும் சரக்கு கப்பலையும் திருப்பி அனுப்ப வேண்டும்.

தூத்துக்குடி துறைமுகத்தில் கடத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ள தாது மணல் மொத்தத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, மற்றும்  நெல்லை, மாவட்ட மீனவ மக்கள் ஒன்று சேர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழி  மற்றும் தரை வழியாகவும் எந்த முன் அறிவிப்பு இல்லாமல் முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்கள். இது சம்பந்தமாக மணப்பாட்டில் மூன்று மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி  துறைமுகதை முற்றுகையிடுவது விஷயமாக  பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

tuticorin harbour to be protested by three district fisher men to stop smuggling of soil containing rare minerals from tamilnadu.

tuticorin harbour is supposed to have sethu canal

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial, Residential and Commercial property for sale in Chennai

Related posts