ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெள்ளி விநாயகர் கடலில் போடப்பட்டது

Silver Ganesh sits in deep sea 20 km off city coastline

Silver Ganesh sits in deep sea 20 km off city coastline

சென்னையில் நேற்று நடந்த விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியின் போது சுமார் 9 லட்சம் ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்பட்டு பக்தர்கள்  வழிபாட்டிற்காக பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த 20கிலோ வெள்ளியாலான விநாயகர் சிலை படகு மூலமாக கடலுக்குள் கொண்டு சென்று போடப்பட்டது. நேற்று சிவசேனா மூலம் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. காசிமேடு பகுதியில் 41 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. புளியந்தோப்பு பகுதியில் 20 கிலோ எடை கொண்ட ரூ. 9 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டிருந்த வெள்ளி விநாயகர் சிலையையும் நேற்று கடலில் போடுவதற்கான ஊர்வலம் நடந்தது. குதிரை சாரட் வண்டியில் வெள்ளி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வண்டியை ராஜா வேடம் அணிந்த வாலிபர் ஓட்டி சென்றார். காசிமேடு கடற்கரையில் படகில் வைத்து நடுக்கடலில் வெள்ளி விநாயகரை போட்டனர். இதேபோல மெரீனா கடற்கரை, நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது. இன்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே விநாயகர் சிலையை கரைப்பதற்காக 110 டன் எடை தூக்கும் கிரேனும், 75 டன் எடை தூக்கும் ஒரு கிரேன்னும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. பல்வேறு தடைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Silver Ganesh sits in deep sea 20 km off city coastline

On a day when hundreds of Vinayaga idols from various parts of the city were immersed in the sea along the Bay of Bengal coastline on Saturday, one of them stood out as unique. Built out of 19-kg silver, it was taken on a fishing boat for immersion at a point about 20 km from the shore. Ganesh idols are normally made of clay or papier mache. But the organisers, Shiv Sena, opted for silver so as to coincide with the silver jubilee of their organising the Vinayaga Chathurthi celebrations in the city. The idol was installed at Pulianthope and provided round-the-clock security. The police had initially advised the Shiv Sena not to immerse it in the sea fearing a mad scramble for its retrieval by potential bounty hunters. They later relented as the organisers told them they had no problems with it being picked by anyone from the sea. To avoid the scramble, the organisers engaged a fishing boat — said to be owned by a person in the team who is a fisherman — and sailed into deep sea with the Rs 20 lakh worth idol from the Kasimedu harbour, hoping that objects dropped at such a distance from the coast do not wash ashore. “If the idol still washes ashore and someone picks it up, it’s the Lord’s will and we have nothing to do about it,” said Kalaivanan, one of the organisers. “If those who installed the statue want to immerse it, we have no objections. We only wanted to prevent law and order problems. We have provided adequate security for the idol procession,” said P Loganathan, Assistant Commissioner of Police. The rest of the immersions, at six places identified by the police in the city, went off without any incident. More immersions are scheduled for Sunday, Monday and Wednesday.

Related posts