அமெரிக்க நிர்பந்தம்!! பணிந்ததா மன்மோகன் சிங் அரசு??

புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின் விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Indian Prime minister Man mohan singh may carry nuclear liability dilution  to U.S.Nuclear power companies

nuclear liability dilution  to U.S.Nuclear power companies
பிரதமர் மன்மோகன் சிங்

அணு உலை விபத்து இழப்பீடு விஷயத்தில் அமெரிக்க நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு பணிந்து, நமது நாடாளுமன்றத்தில் இயற்றபெற்ற சட்டப்படி நடவாமல் அவமதித்தது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கும் எதிரான செயல் என   எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங், இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவிருக்கிறார். அந்த சந்திப்பின் போது இந்தியாவில் அணு மின் உற்பத்திக்காக  அணு உலைகள் நிறுவும் விவகாரத்தில், நாட்டினுடைய நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அமெரிக்க நிறுவங்களுக்கு ஆதரவாகவும் ஒபந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட உத்தேசித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அணுஉலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக இந்தியாவில் அணு மின் தயாரிப்பு உலைகளை நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.  இந்த திட்டத்தின் ஒரு பாகமாக, அமெரிக்க நிறுவனமான ‘வெஸ்டிங்ஹவுஸ் மின்’ ன்னிடம்மிருந்து அணு உலை மையம் மற்றும் உதிரிபாகங்கள் வாங்க மத்திய அரசு நிறுவனமான தேசிய அணுமின் வாரிய நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்.) ஒப்பந்தம் செய்யவுள்ளது. அதில், வெளிநாட்டு நிருவங்களுடைய அணு உலைகள் இந்தியாவில் நிறுவி, அங்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கு உண்டான நஷ்ட ஈடை சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள் வழங்க வேண்டும் என, 2010-ல் கொணர்ந்த அணு விபத்து பொறுப்புச் சட்டம் 17-வது பிரிவு உறுதி செய்கிறது.

இந்நிலையில், போபால் விஷவாயு சம்பவத்தைப்போன்று , இந்தியாவில் நிறுவப்படவிருக்கும் அணுஉலைகள் ஏதேனும் விபத்துக்கு உள்ளானால் , அதற்குப் பெரும் நஷ்டஈட்டுத் தொகையைத் தர வேண்டுமே? என அமெரிக்க நிறுவனமான ‘வெஸ்டிங்ஹவுஸ் மின்’ கவலைப்படுகிறது. அந்தக் கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.ஈ. வாஹன்வதி, அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவை செயல்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை அணுமின்நிலையத்தை நடத்தும் இந்திய நிறுவனத்தின் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின்போது அணு விபத்து பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும், அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையிலும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே, அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் என்.பி.சி.இ.எல். நிறுவனம் மேற்கொள்ளும் எந்தவோர் ஒப்பந்தமும், இந்தியச் சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என அணுசக்தித் துறை (டி.ஏ.இ.) வலியுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக்குழு வரும் 24-ம் தேதி விவாதிக்கும் எனத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேறிய அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17(பி) பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், பிரதமர் பயணத்தின்போது புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சி மிகவும் கவலையளிக்கிறது. இது தனது அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அளிக்கவிருக்கும் பரிசா?

 – பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

அமெரிக்கா மற்றும் அந்நாட்டு நிறுவனங்களின் நிர்பந்தத்திற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அடிபணிவது கண்கூடாகத் தெரிகிறது. அதற்காக நாட்டு மக்களின் நலன்களையும், நாட்டின் பாதுகாப்பையும் விட்டுக் கொடுத்துவிட முடியாது.

– மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்

அணுசக்தி விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியவை என்பது இந்தப் பிரச்னை மூலம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

– இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி. ராஜா

Indian Prime minister Man mohan singh may carry nuclear liability dilution  to U.S.Nuclear power companies

Related posts