உளறல் மன்னனாக வலம் வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்

dmdk founder vijayakanth tutucorin speech

தூத்துக்குடியில் தேமுதிகவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய்காந்த் உளறி தள்ளியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக துவங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 9வது ஆண்டு விழா கொண்டாட்ட பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் உளறு, உளறு என்று உளறியுள்ளார். டாடா ஆதரித்த டைட்டானியம் டை ஆக்சைட் பிளாண்ட் குறித்து பேச நினைத்த அவர் டாடா நானோ என்று தெரிவித்துவிட்டார். டாடா நானோ பிளாண்ட் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்திருந்தால் 3,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்றார். மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரிக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பட்டப்பெயர் உண்டு. இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் விஜயகாந்தோ அழகிரியின் அண்ணன் மு.க.முத்துவை அஞ்சாநெஞ்சன் என்று தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் மணல் கடத்தலை தட்டிக்கேட்டு சஸ்பெண்டான ஐ.ஏ.ஸ் அதிகாரியின் பெயர் துர்கா சக்தி நாக்பால். ஆனால் விஜயகாந்தோ துர்கா சக்தி என்பதற்கு பதில் துர்கா தேவி என்று கூட்டத்தில் பேசினார். கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் என்னவென்றால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை அனல் மின் நிலையம் என்று தெரிவித்துள்ளார். விஜயகாந்த் உளறுவது தெரிந்தாலும் கட்சியினர் யாரும் அதை திருத்த முன்வர மாட்டார்கள். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஏ. பாஸ்கரனின் பெயரை பிரச்சாரத்தின்போது விஜயகாந்த் தவறாகக் கூறினார். உடனே அவர் நீங்கள் என் பெயரை தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று விஜயகாந்திடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் பாஸ்கரனை அறைந்துவிட்டார். அதனால் தான் விஜயாகந்த் என்ன உளறினாலும் அறை வாங்க தயாராக இல்லாத கட்சியினர் அவரை திருத்துவதில்லை.

dmdk founder vijayakanth tutucorin speech

dmdk founder vijayakanth tutucorin speech

Related posts