அமெரிக்க நிறுவனத்தின் தாவரப் பொருட்களை வைத்து தயாரான சைவ முட்டை

Artificial egg made from plants on sale

 ‘Artificial egg’ made from plants on sale

கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தை பயன்படுத்தி சைவ முட்டை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனத்தை ஒன்றை சேர்ந்த உணவு பொருள் விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க தாவரப் பொருள்களை வைத்து நவீன செயற்கை சைவ முட்டையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த சைவ முட்டையை பட்டாணி, பயறு வகைகளை கொண்ட 11 சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புளி கரைசல் கொண்டு உற்பத்தி செய்கிறார்கள். தற்போது இந்த செயற்கை தாவர முட்டை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. கோழி முட்டையை விட இதன் விலை 19 சதவீதம் குறைவு என்றும், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் கூறுகிறார்.மேலும்”சைவ பிரியர்கள் முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்றான பொருட்களை எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் முயன்று வருகிறோம். தற்போது தூள் வடிவில் முட்டை தயாரித்துள்ளோம். அவை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை கோழி முட்டை தரத்தில் அதேபோன்று வழங்க தீவிர முயற்சி செய்துள்ளோம்” எனவும் தெரிவித்தார்.

 Artificial egg made from plants on sale

A radical artificial egg backed by Paypal billionaire Peter Thiel and Bill Gates goes on sale in US supermarkets for the first time today. Made from plants, it can replace eggs in everything from cakes to mayonnaise – without a chicken ever coming close to the production process.

Related posts